ADDED : ஆக 21, 2011 01:23 AM
விழுப்புரம்:விழுப்புரம் நகர தே.மு.
தி.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
கட்சி அலுவலகத்தில் நடந்தது.நகர செயலாளர் நரசிம்மலு பாபு தலைமை
தாங்கினார். அவை தலைவர் ஆதவ முத்து, நகர பொருளாளர் கணேசன் முன்னிலை
வகித்தனர். விஜயகாந்த் பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடுவது,
34வது வார்டில் ஏழை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து கேக்
வெட்டுவது. நகர பகுதியில் 10 வார்டுகளில் கல்வெட்டு திறந்து கொடியேற்றுவது.
மாற்று திறனாளிகளுக்கு உணவு வழங்குவது மற்றும் 51 ஏழை பெண்களுக்கு புடவை
வழங்குவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நகர துணை செயலாளர்கள்
உதயா, சிவா, ராவுத்தர், மாவட்ட பிரதிநிதிகள் சரவணன், செந்தில், முருகன்,
மணிகண்டன், மகளிரணி லதா, வசந்தா, நகர நிர்வாகிகள் கோபி, சிவா, ரவி உட்பட
பலர் கலந்து கொண்டனர்.