/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வெள்ளக்கிணர் குட்டையில் கழிவு நீர் கலப்பு :நோய் பரவும் அபாயம்வெள்ளக்கிணர் குட்டையில் கழிவு நீர் கலப்பு :நோய் பரவும் அபாயம்
வெள்ளக்கிணர் குட்டையில் கழிவு நீர் கலப்பு :நோய் பரவும் அபாயம்
வெள்ளக்கிணர் குட்டையில் கழிவு நீர் கலப்பு :நோய் பரவும் அபாயம்
வெள்ளக்கிணர் குட்டையில் கழிவு நீர் கலப்பு :நோய் பரவும் அபாயம்
ADDED : ஆக 21, 2011 11:54 PM
துடியலூர் : துடியலூர் அருகே வெள்ளக்கிணர் குட்டையில் கழிவுநீர் கலப்பதால்
நிலத்தடி நீர் மாசுபடுவதோடு, நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
துடியலூர் அருகே வெள்ளக்கிணர் பேரூராட்சி 12 வார்டில் ஒன்றரை ஏக்கரில்
குட்டை உள்ளது. இங்கு தேங்கும் நீரால், சுற்று வட்டாரத்தில் நிலத்தடி நீர்
மட்டம் கணிசமாக உயரும்; விவசாயிகளும், பொதுமக்களும் பயன் அடைவர். கணுவாய்
அருகே பள்ளத்தில் இருந்து வரும் மழைநீர், இக்குட்டையை வந்து சேருகிறது.
சமீபகாலமாக இப்பாதையில் வரும் மழைநீருடன் கழிவு நீரும் குட்டையை
வந்தடைகிறது. இதனால் குட்டை நீரின் மேற்பரப்பில் பச்சை நிற பாசி உருவாகி
தூர்நாற்றம் வீசுகிறது. குட்டை நீர் மாசு அடைந்ததால், நிலத்தடி நீரும்
கெட்டுப் போகும் நிலை உருவாகியுள்ளது. இதையொட்டி, வெள்ளக்கிணறு
பேரூராட்சிக்குட்பட்ட 2 ஆழ்குழாய் கிணறுகள் உள்ளன. இதிலிருந்து 4 மற்றும் 5
வார்டுகளுக்கு நீர் வினியோகிக்கப்படுகிறது. குட்டையின் கரையில்
வெள்ளக்கிணர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான
நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். தூர்நாற்றம் வீசுவதால்,
நோயாளிகள் மட்டுமல்லாமல் இங்கு பணியாற்றும் அலுவலர்களும்
பாதிக்கப்படுகின்றனர். வெள்ளக்கிணர் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்
காளிச்சாமி கூறியதாவது: குட்டை நீர் மாசுபட்டுள்ளதால், நிலத்தடி நீர்
கெட்டுப் போக வாய்ப்புள்ளது. இக்குட்டைக்கு நீர் வரும் பாதையில் துடியலூர்
பேரூராட்சி நிர்வாகம் கழிவு நீரை கலக்க விடுகிறது. இதுவே குட்டை நீர்
மாசுபடுவதற்கு காரணம். துடியலூர் பேரூராட்சியில் இருக்கும் கழிவு நீர்
சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதில்லை. அதை செயல்படுத்தி கழிவு நீரை
தூய்மைபடுத்தினால், குட்டையை காப்பாற்றலாம். வெள்ளக்கிணர்
பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க
முடிவு செய்யப்பட்டது. ஆனால், அவை நிறைவேற்றப்பட எவ்வித நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண பொதுப்பணித் துறை
அதிகாரிகளை பலமுறை அணுகியும் பலன் இல்லை என்றார். புதிய நீர் ஆதாரங்களை
உருவாக்காவிட்டாலும், பரவாயில்லை; நீர் ஆதாரங்களுக்கு உயிர்நாடியாக
இருக்கும் இது போன்ற குட்டைகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள்
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


