அரசுக்கு அன்னா ஆதரவாளர்கள் எச்சரிக்கை
அரசுக்கு அன்னா ஆதரவாளர்கள் எச்சரிக்கை
அரசுக்கு அன்னா ஆதரவாளர்கள் எச்சரிக்கை
ADDED : ஆக 27, 2011 09:20 AM
மும்பை: அன்னா ஹசாரேவின் கோரிக்கையை நிறைவேற்ற தவறினால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என மும்பையில் அன்னா ஆதரவாளர்கள் கூறினர்.
இது குறித்து ஊழலுக்கு எதிராக போராடும் அமைப்பை சேர்ந்த விநாயக் என்பவர் கூறுகையில், ரயில் நிலையம் அருகேயுள்ள மிகப்பெரிய சாலைகளில் போக்குவரத்து தடுத்து நிறுத்தப்படும். ஜெயில் நிரப்பும் போராட்டம் நடைபெறும் என கூறினார். மேலும் தொண்டர்கள் அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு தராமலும் போராட்டம் நடத்துவர் என கூறினார். அப்போது அன்னாவுக்கு ஆதரவு தெரிவித்து கோஷங்களும் எழுப்பப்பட்டது.


