Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சிவில் சர்வீஸ் தேர்வுக்கு பயிற்சி பெற அழைப்பு

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு பயிற்சி பெற அழைப்பு

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு பயிற்சி பெற அழைப்பு

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு பயிற்சி பெற அழைப்பு

ADDED : செப் 02, 2011 11:14 PM


Google News

திருப்பூர் : அகில இந்திய குடிமைப்பணிகள் (சிவில் சர்வீஸ்) தேர்வுக்கு முதல் நிலை தேர்வுப்பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கலெக்டர் மதிவாணன் வெளியிட்டுள்ள அறிக்கை: அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வுப்பயிற்சி மையத்தில் முதல் நிலைத்தேர்வு பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யும் வகையில் வரும் அக்., 30ம் தேதி நுழைவுத்தேர்வு நடக்கிறது.

இதற்கான விண்ணப்பங்கள், மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மூலம் வழங்கி, பூர்த்தி செய்து பெறப்படுகிறது.



தேர்வு குறித்த அறிவிப்பு வெளியான ஆக., 28 முதல் செப்., 29 வரை, திருப்பூர் மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, திரும்ப பெறப்படுகிறது. விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு முடித்திருக்க வேண்டும். கல்வித்தகுதி இல்லாதவர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்படாது. விண்ணப்பம் பெற தங்களைப் பற்றிய முழு விவரம் மற்றும் உரிய சான்றுகளுக்கான ஆவண நகல்கள் இணைக்க வேண்டும். விண்ணப்பதாரர் 21-35 வயதுக்குள் இருக்க வேண்டும். பிற்பட்ட வகுப்பினர் 33 வயதுக்கு மிகாமலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் பயிற்சி அளிக்கப்படும். வரும் 27க்கு பின், விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலகத்தில் ஸ்பீட் போஸ்ட் மூலமோ, நேரிலோ சமர்ப்பிக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us