/உள்ளூர் செய்திகள்/திருச்சி/தேர்தல் அலுவலர் கூட்டம் கமிஷனர் பங்கேற்புதேர்தல் அலுவலர் கூட்டம் கமிஷனர் பங்கேற்பு
தேர்தல் அலுவலர் கூட்டம் கமிஷனர் பங்கேற்பு
தேர்தல் அலுவலர் கூட்டம் கமிஷனர் பங்கேற்பு
தேர்தல் அலுவலர் கூட்டம் கமிஷனர் பங்கேற்பு
ADDED : செப் 06, 2011 12:03 AM
திருச்சி: திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட திருச்சி மேற்கு மற்றும் திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் சரிபார்த்தல் குறித்த நியமன அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி மைய கட்டடத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு மாநகராட்சி கமிஷனர் வீரராகவ ராவ் தலைமை வகித்து பேசியதாவது: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான விண்ணப்பங்களை பொது மக்களிடம் இருந்து பெறும் போது பெயர், முகவரி, வயது, கையொப்பம் போன்ற விபரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து வாக்காளர் படிவங்களை பெற வேண்டும். உரிய முறையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பதிவு செய்த பின் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதற்கான பணியில் விண்ணப்பங்களை கண்காணிக்க வேண்டும். தேர்தல் பணியை சிறப்பாக செய்து முடிக்க, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் செயலாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், பொன்மலை கோட்ட உதவி கமிஷனர் தனபாலன், நிர்வாக அலுவலவர் அமுதவள்ளி, கண்காணிப்பாளர் நடராஜன், தேர்தல் துணை தாசில்தார் சிராஜூதின் ஆகியோர் பங்கேற்றனர்.


