Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/நாமக்கல் நகராட்சியில் வார்டு எல்லை சீரமைப்பு :ஒன்பது பஞ்.,கள் நகராட்சியுடன் இணைப்பு

நாமக்கல் நகராட்சியில் வார்டு எல்லை சீரமைப்பு :ஒன்பது பஞ்.,கள் நகராட்சியுடன் இணைப்பு

நாமக்கல் நகராட்சியில் வார்டு எல்லை சீரமைப்பு :ஒன்பது பஞ்.,கள் நகராட்சியுடன் இணைப்பு

நாமக்கல் நகராட்சியில் வார்டு எல்லை சீரமைப்பு :ஒன்பது பஞ்.,கள் நகராட்சியுடன் இணைப்பு

ADDED : செப் 07, 2011 01:59 AM


Google News

நாமக்கல்: நாமக்கல் நகராட்சியில், வார்டு எல்லைகள் சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

நல்லிபாளையம், தும்மங்குறிச்சி, முதலைப்பட்டி, சின்னமுதலைப்பட்டி, காவேட்டிப்பட்டி, பெரியப்பட்டி, கொண்டிசசெட்டிப்பட்டி, அய்யம்பாளையம், கொசவம்பட்டி உள்ளிட்ட ஒன்பது பஞ்சாயத்துகள் நகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளதால், வார்டு எண்ணிக்கை, 39 ஆக உயர்ந்துள்ளது. நல்லிபாளையம் பஞ்சாயத்து, 1, 2, 5 வார்டு, 1வது வார்டாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதலைப்பட்டி பஞ்சாயத்து, 1, 2, 3 வார்டு, 2வது வார்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சின்னமுதலைப்பட்டி பஞ்சாயத்து, 1, 2, 3வது வார்டுகள், 3வது வார்டாகவும், அதே பஞ்சாயத்து, 4, 5வது வார்டு, 4வது வார்டாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



நாமக்கல் நகராட்சி 1வது வார்டு, 5வார்டாகவும், நல்லிபாளையம் பஞ்சாயத்து, 3, 4 வார்டுகள் நகராட்சி, 6வது வார்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தும்மங்குறிச்சி பஞ்சாயத்து, 1, 2, 3, 4 வார்டுகள் நகராட்சியின், 7வது வார்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அய்யம்பாளையம் பஞ்சாயத்து, 1, 2, 3 வார்டுகள், 8வது வார்டாகவும், நகராட்சி 2வது வார்டு, 9 வார்டாகவும், 3வது வார்டு, 10 வார்டாகவும், 6வது வார்டு, 11வது வார்டாகவும், கொசவம்பட்டி பஞ்சாயத்து, 2வது வார்டு நகராட்சியின், 12வது வார்டாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



நகராட்சி 7, 8வது வார்டு, 13வது வார்டாகவும், 4, 5வது வார்டு, 14வது வார்டாகவும், 30வது வார்டு, 15வது வார்டாகவும், 28வது வார்டு, 16வது வார்டாகவும், பெரியப்பட்டி பஞ்சாயத்து, 3, 4, 5வது வார்டு, 17வது வார்டாகவும், காவேட்டிப்பட்டி பஞ்சாயத்து, 1, 2, 3 வார்டுகள் நகராட்சியின், 18வது வார்டாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



அதுபோல் நகராட்சியின், 29 வார்டு, 19வது வார்டாகவும், நகராட்சியின் 10, 11வது வார்டு, 20வது வார்டாகவும், 9வது வார்டு, 21வது வார்டாகவும், 13வது வார்டு, 22வது வார்டாகவும், கொசவம்பட்டி பஞ்சாயத்து, 1வது வார்டு 23வது வார்டாகவும், நகராட்சியின், 12, 14வது வார்டு 24வது வார்டாகவும், நகராட்சி 15வது வார்டு, 25வது வார்டாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



மேலும், 21வது வார்டு, 26வது வார்டாகவும், நகராட்சியின் 26, 27வது வார்டுகள், 27வது வார்டாகவும், 25வது வார்டு, 28வது வார்டாகவும், 24வது வார்டு, 29வது வார்டாகவும், 10, 20வது வார்டு, 30வது வார்டாகவும், 16, 17வது வார்டு, 31வது வார்டாகவும், கொசவம்பட்டி பஞ்சாயத்து, 4வது வார்டு, 32வது வார்டாகவும், அதே பஞ்சாயத்து, 3வது வார்டு, 33வது வார்டாகவும், 18வது வார்டு, 34வது வார்டாகவும், 22வது வார்டு, 35வது வார்டாகவும், 23வது வார்டு, 36வது வார்டாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



பெரியப்பட்டி பஞ்சாயத்து, 1, 2வது வார்டு 37வது வார்டாகவும், கொண்டிசெட்டிப்பட்டி பஞ்சாயத்து, 1, 2, 4வது வார்டு 38வது வார்டாகவும், அதே பஞ்சாயத்து, 3, 5வது வார்டு 39 வார்டாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வார்டு எண்ணிக்கைப்படி, உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளதாக, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us