Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ஐந்து ஆசிரியர்களுக்கு விருது மாணவர்களுக்கு இலவச நோட்டு

ஐந்து ஆசிரியர்களுக்கு விருது மாணவர்களுக்கு இலவச நோட்டு

ஐந்து ஆசிரியர்களுக்கு விருது மாணவர்களுக்கு இலவச நோட்டு

ஐந்து ஆசிரியர்களுக்கு விருது மாணவர்களுக்கு இலவச நோட்டு

ADDED : செப் 07, 2011 02:29 AM


Google News

திருத்தணி : திருத்தணி பெரியார் நகரில் உள்ள பீப்பில்ஸ் இந்தியா நேஷனல் பாரத் சேவக் சங்கத்தின் சார்பில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டும், மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம், ஏழைகளுக்கு வேட்டி, சேலை வழங்கும் விழா நடைபெற்றது.மாநில இணைச் செயலர் சிட்டிபாபு தலைமை வகித்தார்.

அருண்குமார் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினர்களாக திருத்தணி டி.எஸ்.பி. மாணிக்கம், அ.தி.மு.க., நகரச் செயலர் சவுந்திரராஜன் ஆகியோர் கலந்து கொண்டு திருத்தணி பகுதியில் நல்லாசிரியர் விருது பெற்ற முன்னாள் தலைமை ஆசிரியர் ராமன், ஆசிரியைகள் ரெய்ச்சல் பிரபாவதி, சுதா, ஆசிரியர்கள் கார்த்திகேயன், ஆனந்தன் ஆகிய ஐந்து பேருக்கும் விருதும், பாராட்டி நினைவு பரிசும் வழங்கினர். பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு நோட்டுப் புத்தகம், ஏழைகள் 50 பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர். கண்ணன் நன்றி கூறினார்.















      Our Apps Available On




      Dinamalar

      Follow us