Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/புறநகர் மின்சார ரயில் போக்குவரத்தில் மாற்றம்

புறநகர் மின்சார ரயில் போக்குவரத்தில் மாற்றம்

புறநகர் மின்சார ரயில் போக்குவரத்தில் மாற்றம்

புறநகர் மின்சார ரயில் போக்குவரத்தில் மாற்றம்

ADDED : செப் 07, 2011 11:51 PM


Google News

சென்னை : ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால், மூன்று புறநகர் மின்சார ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.சிங்கப்பெருமாள்கோயில் - செங்கல்பட்டு இடையே ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால், இன்றும், வரும் 10ம் தேதியிலிருந்து 15ம் தேதி வரையும், சென்னை பீச் ரயில் நிலையத்திலிருந்து காலை 7.38 மணிக்கு செங்கல்பட்டுக்கு இயக்கப்பட வேண்டிய புறநகர் மின்சார ரயில், சிங்கப்பெருமாள் கோயில் வரை மட்டுமே இயக்கப்படும்.செங்கல்பட்டிலிருந்து சென்னை பீச் ரயில் நிலையத்திற்கு காலை 9.40 மணிக்கு இயக்கப்பட வேண்டிய புறநகர் மின்சார ரயில், செங்கல்பட்டுக்கு பதிலாக சிங்கப்பெருமாள்கோயிலிலிருந்து இயக்கப்படும்.செங்கல்பட்டிலிருந்து சென்னை பீச் ரயில் நிலையத்திற்கு காலை 10.45 மணிக்கு இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில், 30 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படலாம் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது







      Our Apps Available On




      Dinamalar

      Follow us