/உள்ளூர் செய்திகள்/தேனி/நான்கு வழிச்சாலையை மாற்றி அமைத்தால் வாய்ப்பு : போடி-தேவாரத்தில் தொழில் வளம் பெருகநான்கு வழிச்சாலையை மாற்றி அமைத்தால் வாய்ப்பு : போடி-தேவாரத்தில் தொழில் வளம் பெருக
நான்கு வழிச்சாலையை மாற்றி அமைத்தால் வாய்ப்பு : போடி-தேவாரத்தில் தொழில் வளம் பெருக
நான்கு வழிச்சாலையை மாற்றி அமைத்தால் வாய்ப்பு : போடி-தேவாரத்தில் தொழில் வளம் பெருக
நான்கு வழிச்சாலையை மாற்றி அமைத்தால் வாய்ப்பு : போடி-தேவாரத்தில் தொழில் வளம் பெருக
ADDED : செப் 08, 2011 10:46 PM
போடி : நான்கு வழிச்சாலை திட்டத்தை மாற்றி அமைத்தால், போடி-தேவாரம் பகுதிகளில் தொழில் வளம் பெருக வாய்ப்பு உள்ளது.
போடி விலக்கிலிருந்து வீரபாண்டி, கோட்டூர், சீலையம்பட்டி, சின்னமனூர், அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம்,கம்பம், கூடலூர் வரை நான்கு வழிச்சாலைக்கான பணி துவக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்தின் தஞ்சை என்றழைக்கப்படும் இப்பகுதியில் வற்றாமல் முல்லையாற்றில் நீர் வருவதால் நெல், வாழை, திராட்சை விவசாயம் அதிகளவில் நடக்கிறது. இப்பகுதி வழியாக நான்கு வழிச்சாலை அமைப்பதால்,ரோட்டின் இருபுறமும் உள்ள 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான மரங்கள் வெட்டப்படுகின்றன. 800 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்படுகின்றன. இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்களுக்கு பாத்தியப்பட்ட 200 க்கும் மேற்பட்ட வழிபாட்டு தலங்கள், பள்ளிகள் இடிக்கப்படும். 500 ஏக்கருக்கு மேல் நெல், வாழை உள்ளிட்ட விவசாய நிலங்கள் அழியும், என்பதால் இப்பகுதி மக்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றர். இந்நிலையில் மாற்று பாதையாக போடி விலக்கிலிருந்து போடி, மேலச்சொக்கநாதபுரம், சங்கராபுரம், வெம்பக்கோட்டை, தேவாரம், பண்ணைப்புரம், கோம்பை வழியாக உத்தமபாளையம், கம்பம், கூடலூர் வரை நான்கு வழிச்சாலை அமைக்கலாம். போக்குவரத்து நேரம் குறைவதுடன், அரசுக்கு பல கோடி ரூபாய் மிச்சமாகும். போடி அருகே பொட்டிபுரத்தில் நியூட்ரினோ மையம் அமைய உள்ளதால் தொழில் வளமும் பெருகும்.


