/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சேத்தியாத்தோப்பில்இலவச கண் சிகிச்சை முகாம்சேத்தியாத்தோப்பில்இலவச கண் சிகிச்சை முகாம்
சேத்தியாத்தோப்பில்இலவச கண் சிகிச்சை முகாம்
சேத்தியாத்தோப்பில்இலவச கண் சிகிச்சை முகாம்
சேத்தியாத்தோப்பில்இலவச கண் சிகிச்சை முகாம்
ADDED : செப் 16, 2011 12:17 AM
சேத்தியாத்தோப்பு:சேத்தியாத்தோப்பு அரிமா சங்கம், மாவட்ட பார்வை இழப்பு
தடுப்பு சங்கம், புதுவை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய
இலவச கண் சிகிச்சை முகாம் சேத்தியாத்தோப்பு ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப்பள்ளியில் நடந்தது.அரிமா சங்கத் தலைவர் கொளஞ்சிநாதன் தலைமை
தாங்கினார்.
மாவட்டத் தலைவர் சண்முகம் செயலர் தாமரைச்செல்வன், பொருளாளர்
புகழேந்தி முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் செங்குட்டுவன் முகாமை துவக்கி
வைத்தார். முன்னாள் தலைவர்கள் விஸ்வநாதன், ராமானுஜம், கலியமூர்த்தி உட்பட
பலர் பங்கேற்றனர்.முகாமில் கண்புரை, சர்க்கரை நோய், கண்நீர் அழுத்த நோய்,
குழந்தைகளின் கண் நோய், கிட்டப் பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து,
கண்ணின் கருவிழியில் புண் உள்ளிட்ட 300 நோயாளிகளுக்கு சிகிச்சை
அளிக்கப்பட்டது. வெற்றிவேல் நன்றி கூறினார்.


