/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/"ஹோமோ செக்ஸ்' பிரச்னையால் தொழிலாளி கொலை: இருவர் கைது"ஹோமோ செக்ஸ்' பிரச்னையால் தொழிலாளி கொலை: இருவர் கைது
"ஹோமோ செக்ஸ்' பிரச்னையால் தொழிலாளி கொலை: இருவர் கைது
"ஹோமோ செக்ஸ்' பிரச்னையால் தொழிலாளி கொலை: இருவர் கைது
"ஹோமோ செக்ஸ்' பிரச்னையால் தொழிலாளி கொலை: இருவர் கைது
திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே நடந்த தச்சுத் தொழிலாளி கொலை வழக்கில், இரு வாலிபர்களை, போலீஸார் கைது செய்தனர்.
மேலும், தங்கராஜ் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் இருந்த, அவரது மொபைல் ஃபோனை போலீஸார் கைப்பற்றினர். அதில், கடைசியாக பேசிய இரு ஃமொபைல் எண்களுக்குரிய நபர்கள் யார் என விசாரித்தனர். விசாரணையில், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் டெக்ஸ்டைல்ஸில் பணிபுரியும் செல்வராஜ் (29), அந்தியூர் தவிட்டுப்பாளையத்தை சேர்ந்த விஜயக்குமார் (29) என்பது தெரியவந்தது. அவர்களை பிடித்து போலீஸார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட தங்கராஜ், அவரது நண்பர் செல்வராஜூம் ஹோமோ செக்ஸில் ஈடுபட்டு வந்துள்ளனர். செல்வராஜை, தங்கராஜ் அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். எனவே, நண்பர்கள் ஆலோசனைப்படி, தங்கராஜூவை தீர்த்துக் கட்ட செல்வராஜ் முடிவு செய்துள்ளார். அதன்படி, சம்பவ தினமான 9ம் தேதி இரவு, உப்புக்கரடு மலைக்கு தங்கராஜை செல்வராஜ் வரவழைத்துள்ளார். அங்கு, செல்வராஜ், விஜயகுமார் மற்றும் தங்கராஜ் ஆகிய மூவரும் மது அருந்தியுள்ளனர். குடிபோதையில் இருந்த தங்கராஜின் தலையில் இருவரும் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளனர். அதையடுத்து, இருவரையும் போலீஸார் கைது செய்து, வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


