/உள்ளூர் செய்திகள்/சென்னை/வெளிநாட்டு மாணவர்கள் இந்தியா வருகை* தொழிற்துறை வல்லுனர்களுடன் கலந்துரையாடல்வெளிநாட்டு மாணவர்கள் இந்தியா வருகை* தொழிற்துறை வல்லுனர்களுடன் கலந்துரையாடல்
வெளிநாட்டு மாணவர்கள் இந்தியா வருகை* தொழிற்துறை வல்லுனர்களுடன் கலந்துரையாடல்
வெளிநாட்டு மாணவர்கள் இந்தியா வருகை* தொழிற்துறை வல்லுனர்களுடன் கலந்துரையாடல்
வெளிநாட்டு மாணவர்கள் இந்தியா வருகை* தொழிற்துறை வல்லுனர்களுடன் கலந்துரையாடல்
ADDED : செப் 25, 2011 12:09 AM
சென்னை:''சவாலை சமாளிக்கும் திறன், தலைமைப் பண்பு, கலாசார ஒழுக்கம் ஆகியவை இருந்தால், தொழிலில் சாதிக்க முடியும்,'' என, அசோக் லேலண்ட் இயக்குனர் அம்ரோலியா தெரிவித்தார்.இந்தோனேஷியா, கம்போடியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட, 10 ஆசிய நாடுகளைச் சேர்ந்த, கல்லூரி மாணவர்கள், இந்திய கலாசாரத்தை அறிந்து கொள்வதற்காக, இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ளனர்.இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடந்த, தொழில்துறை வல்லுனர்கள் பங்கு கொண்ட கலந்துரையாடல் கூட்டத்தில், மாணவர்கள் நேற்று கலந்து கொண்டனர்.இதில், அசோக் லேலண்ட் நிறுவனத்தின் இயக்குனர் அம்ரோலியா பேசியதாவது:ஆசிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்தியா வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், ஒரே நேரத்தில் இந்தியா வந்ததன் மூலம், நமது நாடுகளின் பொதுப் பிரச்னைகளை அறிந்து கொள்ளலாம்.இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான தொழில் நிறுவனங்கள் அனைத்தும், குடும்ப முறையைச் சார்ந்துள்ளன. இந்திய தொழிலதிபர்கள், தங்கள் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு படிக்க அனுப்புவதுடன், அங்கு தங்கி வேலை பார்க்கவும் அனுமதிக்கின்றனர். இதன் மூலம், அந்நாடுகளின் கலாசாரத்தை அவர்கள் கற்றுக் கொள்கின்றனர். பிறகு, அவர்களை இந்தியாவிற்கு அழைத்து வந்து, தாங்கள் ஈடுபட்டுள்ள தொழிலில் களம் இறக்குகின்றனர். பல நாடுகளின் பழக்க, வழக்கங்களை கற்றுணர்ந்த அவர்கள், சிறந்த தொழில் முனைவோர்களாக உருவெடுக்கின்றனர். சவாலை சமாளிக்கும் திறன், தலைமைப் பண்பு, கலாசார ஒழுக்கம் ஆகியவை இருந்தால், தொழிலில் சாதிக்க முடியும். தொழிலையும், எவ்வித பிரச்னையும் இல்லாமல், நீண்ட காலத்திற்கு சிறப்பாக நடத்த முடியும்.இவ்வாறு அம்ரோலியா பேசினார். இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல முன்னாள் தலைவர் பிரதிப்தா மொகபாத்ரா பேசும்போது, 'உலகமயமாக்கல் கொள்கைக்கு பிறகு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது. பல வெளிநாட்டு நிறுவனங்களை, இந்திய நிறுவனங்கள் கையகப்படுத்துவது பெருமையாக உள்ளது' என்றார்.காக்னிசன்ட் டெக்னாலஜிஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் உதவி துணை தலைவர் சத்யா சங்கர் பேசும்போது, 'இந்தியாவில், பல நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் பெண்கள் உள்ளனர். நம்மால் முடியும் என்ற எண்ணத்தை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்' என்றார்.


