/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ஸ்டிக்கர் கடை உரிமையாளர்கள் எட்டு பேர் மீது காஞ்சிபுரம் போலீசார் அதிரடிஸ்டிக்கர் கடை உரிமையாளர்கள் எட்டு பேர் மீது காஞ்சிபுரம் போலீசார் அதிரடி
ஸ்டிக்கர் கடை உரிமையாளர்கள் எட்டு பேர் மீது காஞ்சிபுரம் போலீசார் அதிரடி
ஸ்டிக்கர் கடை உரிமையாளர்கள் எட்டு பேர் மீது காஞ்சிபுரம் போலீசார் அதிரடி
ஸ்டிக்கர் கடை உரிமையாளர்கள் எட்டு பேர் மீது காஞ்சிபுரம் போலீசார் அதிரடி
ADDED : செப் 26, 2011 02:53 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் வாகனப் பதிவு எண் பலகையில், அரசு அறிவித்தபடி பதிவு எண்களை எழுதாமல், வாகன ஓட்டிகளின் விருப்பத்திற்கேற்ப ஸ்டிக்கர் ஒட்டப்படும், என விளம்பரப்படுத்திய, ஸ்டிக்கர் கடை உரிமையாளர்கள் எட்டு பேரைப் போலீசார் கைது செய்தனர்.மோட்டார் வாகன விதி 50 மற்றும் 51ன்படி, அனைத்து வாகனங்களிலும், பதிவு எண் பலகை பொருத்தப்பட வேண்டும்.
அதில் முன்பக்கம் 35 மி.மீ., பின்பக்கம் 40 மி.மீ., உயரத்தில் எழுத்துக்கள் மற்றும் எண்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும். எழுத்துக்கள் இடையே 5 மி.மீ., இடைவெளி இருக்க வேண்டும். பதிவு எண் தவிர, வேறு எதையும், பதிவு எண் பலகையில் எழுதக் கூடாது. ஆனால், பல வாகன ஓட்டிகள் விதிகளை மீறி, தங்களுக்கு பிடித்த அரசியல் கட்சி தலைவர்கள், கட்சி சின்னங்கள், நடிகர், நடிகைகள் படங்களை ஒட்டி வைத்துள்ளனர். சிலர் எண்களை தங்கள் விருப்பப்படி எழுதியுள்ளனர். சிலர் தங்களுக்கு பிடித்த வாசகங்கள், தங்கள் குடும்பத்தினரின் பெயர்கள் போன்றவற்றை எழுதி வைத்துள்ளனர்.இதுபோன்று பதிவு எண் பலகை வைத்திருப்போர், கடந்த மாதம் 31ம் தேதிக்குள், அரசு விதிமுறைப்படி பதிவு எண் பலகைகளை மாற்றி அமைக்க வேண்டும், எனத் தமிழக போக்குவரத்துத் துறை உத்தரவிட்டது. முறைப்படி பதிவு எண் பலகை இல்லாத, வாகனங்களை ஓட்டி வருவோருக்கு அபராதம் விதிக்கப்படும், என போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவித்தனர்.காஞ்சிபுரத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், போலீசார் அவ்வப்போது சோதனைகள் நடத்தினர். வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கடை உரிமையாளர்களிடம், வாகனங்களுக்கு விதிமுறைகளின்படி ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும். அவரவர் விருப்பத்திற்கு ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது, என அறிவுறுத்தினர்.எனினும், அரசு அறிவித்தபடி பதிவு எண் பலகை பொருத்தாமல், ஏராளமான வாகனங்கள் நகரில் வலம் வருகின்றன. ஸ்டிக்கர் கடைகளில், வாகன ஓட்டிகள் விரும்பும் டிசைன்களில், ஸ்டிக்கர்கள் ஒட்டித்தரப்படும், என விளம்பரப்படுத்தப்பட்டது. அதுபோன்ற கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, காஞ்சிபுரம் போலீஸ் எஸ்.பி., மனோகரன் போலீசாருக்கு உத்தரவிட்டார்.அதன்பேரில் சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீசார், காஞ்சிபுரம் நகரில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அரசு விதிகளுக்கு புறம்பாக, வாகனங்களுக்கு ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும், என விளம்பரப்படுத்திய ஸ்டிக்கர் கடை உரிமையாளர்களான, செட்டிகுளம் தெருவை சேர்ந்த லோகநாதன்,35, பஞ்சுபேட்டையை சேர்ந்த சம்பத்,30, பிள்ளையார்பாளையத்தை சேர்ந்த சுரேஷ்,32, செம்பரம்பாக்கத்தை சேர்ந்த ஞானப்பிரகாசம்,28, காமராஜர் தெருவை சேர்ந்த இப்ராகிம்,23, செங்கழு நீரோடை வீதியை சேர்ந்த நாகராஜ்,35, ஜெ.ஜெ.நகரை சேர்ந்த ரபீ,21, மளிகை செட்டி தெருவை சேர்ந்த பழனி,38, ஆகியோரை கைது செய்தனர். இதுபோன்ற சோதனைகள் தொடரும், எனப் போலீசார் தெரிவித்தனர்.


