/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தேர்தல் பணி குறித்து "வீடியோ கான்பரன்சிங்'தேர்தல் பணி குறித்து "வீடியோ கான்பரன்சிங்'
தேர்தல் பணி குறித்து "வீடியோ கான்பரன்சிங்'
தேர்தல் பணி குறித்து "வீடியோ கான்பரன்சிங்'
தேர்தல் பணி குறித்து "வீடியோ கான்பரன்சிங்'
ADDED : செப் 26, 2011 11:15 PM
திருப்பூர் : தேர்தல் ஏற்பாடு குறித்து மாநில தேர்தல் கமிஷனர் பங்கேற்ற 'வீடியோ கான்பரன்சிங்' முறை ஆலோசனை நடந்தது.தமிழக தேர்தல் கமிஷனர் சோ.
அய்யர் நேற்று காலை சென்னையிலிருந்து 'வீடியோ கான்பரன் சிங்' முறையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமச்சந்திரன், ஊரக வளர்ச்சி துறை நேர்முக உதவியாளர் முருகேசன் உள்ளிட்ட அதி காரிகள்; தேர்தல்பணியில் உள்ள கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் பங்கேற்றனர். உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணி குறித்து அதிகாரிகள் விளக்கினர்.வாக்காளர் பட்டியலில் சிறு திருத்தங்கள் மேற்கொள்ளும் விதம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் குறித்த விவரங்களில் வயது, பாலினம் போன்றவற்றில் உள்ள தவறுகளை சரி செய்யும் விதம் மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை கொண்டு பூத் ஸ்லிப் அச்சடிக்கும் முறை குறித்தும் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்பட்டது.


