/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/அரியலூரில் செப்.,29ல் விஜயகாந்த் பிரச்சாரம்அரியலூரில் செப்.,29ல் விஜயகாந்த் பிரச்சாரம்
அரியலூரில் செப்.,29ல் விஜயகாந்த் பிரச்சாரம்
அரியலூரில் செப்.,29ல் விஜயகாந்த் பிரச்சாரம்
அரியலூரில் செப்.,29ல் விஜயகாந்த் பிரச்சாரம்
ADDED : செப் 27, 2011 12:09 AM
அரியலூர்: ''உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வரும் 29ம் தேதி அரியலூரில் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்,'' என தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் ராம ஜெயவேல் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர்களை ஆதரித்து, தமிழகம் முழுவதும் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்கிறார். தொடர்ந்து, அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும், தே.மு.தி.க., வேட்பாளர்களுக்கு ஓட்டு கேட்டு, வரும் 29ம் தேதி வியாழன் மாலை 4 மணிக்கு, அரியலூர் நகராட்சி அலுவலகம் அருகே, தே.மு.தி.க., நிறுவன தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். பொதுமக்களும் கட்சித் தொண்டர்களும் இதில் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு ராம ஜெயவேல் தெரிவித்தார்.


