பாகிஸ்தானில் பஸ்விபத்து: 37 பேர் பலி
பாகிஸ்தானில் பஸ்விபத்து: 37 பேர் பலி
பாகிஸ்தானில் பஸ்விபத்து: 37 பேர் பலி
ADDED : செப் 27, 2011 06:55 AM
கராச்சி: பாகிஸ்தானில் மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தபள்ளி பேருந்து விபத்துக்குள்ளானதில் 37 பேர் பலியாயினர்.
70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானின் லாகூர் அருகே உள்ள பாசிலாபாத் நகரில் உள்ள பள்ளி மாணவர்கள் காலார் கார்பகுதிக்கு சுற்றுலா சென்றனர். பஸ் சாவல்நகர் அருகே சென்றுகொண்டிருந்த போது திடீரென பள்ளத்தில் கவிழ்ந்தது. இவ்விபத்தில் பஸ்சில்பயணம் செய்த பள்ளிகுழந்தைகள் 37 பேர் பலியாயினர் .70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து அருகில் இருந்த கிராம மக்கள் கூறுகையில் அதிகளவிலான கூட்டம் மற்றும் போதியலைட் வசதி இல்லாததால் விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர். அதேசமயம் விசாரணை அதிகாரிகள் பஸ்சில் பிரேக் பெயிலியர் ஆனதால் விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள ராவல்பிண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.72 பேர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய பஸ்சில் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் என 110க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக தெரிய வந்துள்ளது. அளவுக்கு அதிகமான மாணவர்களை பஸ்சில்பயணம் செய்ய அனுமதி வழங்கியது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


