/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/4 ஆயிரம் வாக்குகளில் வெற்றி அ.தி.மு.க.,மந்தக்காளை நம்பிக்கை4 ஆயிரம் வாக்குகளில் வெற்றி அ.தி.மு.க.,மந்தக்காளை நம்பிக்கை
4 ஆயிரம் வாக்குகளில் வெற்றி அ.தி.மு.க.,மந்தக்காளை நம்பிக்கை
4 ஆயிரம் வாக்குகளில் வெற்றி அ.தி.மு.க.,மந்தக்காளை நம்பிக்கை
4 ஆயிரம் வாக்குகளில் வெற்றி அ.தி.மு.க.,மந்தக்காளை நம்பிக்கை
ADDED : செப் 27, 2011 09:23 PM
சிவகங்கை : சிவகங்கை நகராட்சி அ.தி.மு.க.,வேட்பாளர் மந்தக்காளை நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அவர் கூறியதாவது:சிவகங்கை பகுதி மக்களின் நலன் கருதி எம்.ஜி.ஆர்.,ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து சிவகங்கையை பிரித்து தனிமாவட்டமாக அறிவித்தார். நன்றி மறவாத சிவகங்கை மக்கள் நன்றி தெரிவிக்கும் வகையில் இம்முறை அ.தி.மு.க.,வேட்பாளரான எனக்கு கூடுதல் வாக்குகளில் வெற்றி பெற செய்வார்கள். சிவகங்கை நகராட்சியை முதன்மையாக்க பாடுபடுவேன். முழுமையடையாமல் கிடக்கும் பாதாள சாக்கடை திட்டம் முறையாக செயல்படுத்தப்படும். அனைத்து பகுதிகளுக்கும் தார்சாலை, சிமென்ட் சாலை அமைக்கப்படும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கிடைக்கும் குடிநீர் தினமும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். நகரில் பராமரிக்கப்படாமல் கிடக்கும் ஊரணிகள் சீரமைக்கப்படும். கிடப்பில் போடப்பட்டுள்ள சிவகங்கை பஸ் நிலைய பணிகளை விரைந்து முடிக்க பாடுபடுவேன்.கட்சி பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் நலத்திட்டங்கள் கிடைக்க பாடுபடுவேன். அ.தி.மு.க., அரசின் திட்டங்கள் பொதுமக்களை கவர்ந்துள்ளதால் 4 ஆயிரம் வாக்குகள் கூடுதல் பெற்று வெற்றி பெறுவேன், '' என்றார். வேட்பு மனுதாக்கலின் போது மாவட்ட செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட கட்சியினர் இருந்தனர்.


