/உள்ளூர் செய்திகள்/மதுரை/அலங்காநல்லூரில் உயிரைப்பறித்த "குவார்ட்டர்'அலங்காநல்லூரில் உயிரைப்பறித்த "குவார்ட்டர்'
அலங்காநல்லூரில் உயிரைப்பறித்த "குவார்ட்டர்'
அலங்காநல்லூரில் உயிரைப்பறித்த "குவார்ட்டர்'
அலங்காநல்லூரில் உயிரைப்பறித்த "குவார்ட்டர்'
ADDED : செப் 30, 2011 02:08 AM
அலங்காநல்லூர் : அலங்காநல்லூர் ஒன்றியத்தில் நான்கு தினங்களாக ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு நூற்றுக்கு மேற்பட்டவர்கள் மனு தாக்கல் செய்தனர்.
மனு தாக்கல் செய்ய வருபர்கள் தங்கள் பலத்தை காண்பிக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் உடன் வருபர்களுக்கு குவார்ட்டர் மற்றும் பிரியாணி வாங்கி கொடுப்பதை ஒரு மரபாக ஏற்படுத்தியுள்ளனர். அ. புதுப்பட்டியை சேர்ந்த சோமசுந்தர கணேசன்(52) என்பவர் பாலமேடு அருகேயுள்ள பாண்டியன்( அம்மா பேரவை ஒன்றிய செயலாளர்) வீட்டில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று பாண்டியன் குடும்பத்தில் ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்தனர்.
முதலாளி வீட்டில் இரண்டு பதவி என்ற சந்தோஷத்தில் கேட் கடை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் அளவுக்கு அதிகமாக மது அருந்தினார். எம்.டி.சி.சி., பாங்க் அருகே நடந்து வந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்தவர் சம்பவ இடத்தில் பலியானார்.


