/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/புராண கதைகளை அறிந்தால் நாட்டுப் பற்று அதிகரிக்கும்புராண கதைகளை அறிந்தால் நாட்டுப் பற்று அதிகரிக்கும்
புராண கதைகளை அறிந்தால் நாட்டுப் பற்று அதிகரிக்கும்
புராண கதைகளை அறிந்தால் நாட்டுப் பற்று அதிகரிக்கும்
புராண கதைகளை அறிந்தால் நாட்டுப் பற்று அதிகரிக்கும்
ADDED : அக் 02, 2011 01:55 AM
பந்தலூர் : 'மாணவ பருவத்தில் புராண கதைகளை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினால் நாட்டுப்பற்று அதிகரிக்கும்,' என அறிவுறுத்தப்பட்டது.விஸ்வ இந்து பரிஷத் தர்ம பிரசார் சமிதியின் கூடலூர்-பந்தலூர் பிரகண்டம் சார்பில், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி-பரிஷத் ஸ்தாபன தின விழா, ஸ்ரீ வித்யாமஹா யக்ஞ்ம் நிகழ்ச்சி ஆகியவை பந்தலூர் அருகே அய்யன் கொல்லியில் நடந்தது.
அய்யன்கொல்லி ஸ்ரீ சரஸ்வதி மஹா வித்யாலயா வளாகத்தில் துவங்கிய நிகழ்ச்சியில் தர்ம பிரசார் சமிதி தலைவர் பரதன் வரவேற்றார். கிராம கோவில் பூஜாரிகள் பேரவை தலைவர் சிவலிங்கம் குருக்கள் இறைவணக்கம் பாடினார். சேவாபாரதி மாவட்ட தலைவர் சுரேந்திரன் முன்னிலை வகித்தார்.பேரூர் மடத்தின் ஆதீன அடிகளார் மற்றும் வேள்வி குழுவினர் சார்பில் ஜெயபிரகாஷ் குருக்கள் மஹா யாகபூஜை நடந்தது. இதனை முன்னிட்டு அய்யன்கொல்லி சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படும் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதற்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில் பேரூர் மடத்தின் இளையபட்டம் தவத்திரு மருதாசலஅடிகள் பங்கேற்று பேசுகையில், ''கடந்த 1964ம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் சாந்திபவனி ஆஸ்ரமத்தில் ஆரம்பிக்கப்பட்டு இன்று உலகம் தழுவிய பேரியக்கமாகவும், இந்து சமயத்திற்கு தொண்டு புரியும் இயக்கமாகவும் வி.எச்.பி. இயக்கம் மாறியுள்ளது. அதில் தர்ம பிரசார் சமிதி ஏழை எளிய மக்களுக்கு தொண்டு செய்து வருகிறது. இதில், வளரும் குழந்தைகள் உள்ளத்தில் வெறும் ஏட்டுப்பாடங்கள் மட்டுமின்றி பக்தி, தேசிய சிந்தனை, நல்லொழுக்கம் ஆகியவை ஏற்பட அறிவில், ஞானத்தில் சிறந்து விளங்கிடவும் வேண்டி இதுபோன்ற ஆன்மிக போட்டிகள் நடத்தப்படுகிறது. எனவே மாணவ பருவத்தில் புராண கதைகளை தொடர்ந்து படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தினால் நாட்டுப்பற்றும், அன்புகலந்த வாழ்க்கையும் ஏற்படுத்த வழி கிடைக்கும்,'' என்றார்.நிகழ்ச்சியில் வி.எச்.பி. மாநில இணை செயலாளர் குமரன், ஆர்.எஸ்.எஸ். மாவட்ட செயலாளர் மனோஜ்குமார், நிர்வாகிகள் முத்துராமலிங்கம், நடராஜன் மாஸ்டர், பரசுராம், லட்சுமி குட்டி டீச்சர், குமரேசன், வி.எச்.பி. மாவட்ட செயலாளர் தனராஜ், தர்ம பிரச்சார் பொறுப்பாளர்கள் சின்னதம்பி, சிவராஜ், விஸ்வநாதன், பாஸ்கரன், பிரபாகரன், பாலகிருஷ்ணன், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


