/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/"முஸ்லீம் வேட்பாளர்கள் அறிவிக்கவில்லை' : அ.தி.மு.க.,வை புறக்கணிக்க ம.ம.க., முடிவு"முஸ்லீம் வேட்பாளர்கள் அறிவிக்கவில்லை' : அ.தி.மு.க.,வை புறக்கணிக்க ம.ம.க., முடிவு
"முஸ்லீம் வேட்பாளர்கள் அறிவிக்கவில்லை' : அ.தி.மு.க.,வை புறக்கணிக்க ம.ம.க., முடிவு
"முஸ்லீம் வேட்பாளர்கள் அறிவிக்கவில்லை' : அ.தி.மு.க.,வை புறக்கணிக்க ம.ம.க., முடிவு
"முஸ்லீம் வேட்பாளர்கள் அறிவிக்கவில்லை' : அ.தி.மு.க.,வை புறக்கணிக்க ம.ம.க., முடிவு
ADDED : அக் 03, 2011 01:45 AM
ஆலங்குடி: 'முஸ்லீம் வேட்பாளர்களை அறிவிக்காததால், உள்ளாட்சித்தேர்தலில், அ.தி.மு.க.,வை புறக்கணிக்கப் போவதாக' மனிதநேய மக்கள் கட்சியினர் (ம.ம.க.,) முடிவெடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி டவுன் பஞ்சாயத்தில் 15 வார்டுகள் உள்ளது.
15 வார்டுகளிலும், டவுன் பஞ்., தலைவர் உள்பட எந்த பதவிக்கும் முஸ்லீம்களுக்கு சீட் கொடுக்கவில்லை. எனவே, உள்ளாட்சித்தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போடாமல் புறக்கணிக்க முஸ்லீம்கள் முடிவெடுத்துள்ளதாக, மனித நேய மக்கள் கட்சி ஒன்றியச்செயலாளர் அப்துல் திலீப் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
ஆலங்குடி தேர்தல் 19ம் தேதி நடக்கிறது. 15 வார்டுகளில் அ.தி.மு.க.,வும், 14 வார்டுகளில் தி.மு.க.,வும், 10 வார்டுகளில் தே.மு.தி.க.,வும், ஆறு வார்டுகளில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது. மற்ற அனைத்துக்கட்சியும் முஸ்லீம்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளனர். அ.தி.மு.க.,வில் மட்டும் ஒருவருக்கு கூட வாய்ப்பு அளிக்கவில்லை. அதனால் முஸ்லீம்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஆலங்குடி உள்ளாட்சி தேர்தலில் சிறுபான்மையினரை அ.தி.மு.க., புறக்கணித்துள்ளது.
ஆலங்குடி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கோஷ்டி, மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் கோஷ்டி இரு கோஷ்டியாக செயல்படுகின்றனர். சிறுபான்மை இனத்தை சேர்ந்த அ.தி.மு.க., நகர அவைத்தலைவர் முகமது யூசுப், டவுன் பஞ்., தலைவர் பதவிக்கான வாய்ப்பை மறுத்துள்ளனர்.
கடந்த தேர்தலில் அ.தி.மு.க., சார்பில், டவுன் பஞ்., தலைவரை தேர்ந்தெடுக்க, முஸ்லீம் உறுப்பினர்கள் முக்கிய பங்கு வகித்தனர். அதைமறந்து, சிறுபான்மையினரை இத்தேர்தலில் ஓரம்கட்டிய அ.தி.மு.க.,வுக்கு உள்ளாட்சி தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம். இவ்வாறு அவர் கூறினார்.


