/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/நேரு நகரில் மழைநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு : ரசக்கரகோட்டை வேட்பாளர் பாஸ்கரன் சபதம்நேரு நகரில் மழைநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு : ரசக்கரகோட்டை வேட்பாளர் பாஸ்கரன் சபதம்
நேரு நகரில் மழைநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு : ரசக்கரகோட்டை வேட்பாளர் பாஸ்கரன் சபதம்
நேரு நகரில் மழைநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு : ரசக்கரகோட்டை வேட்பாளர் பாஸ்கரன் சபதம்
நேரு நகரில் மழைநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு : ரசக்கரகோட்டை வேட்பாளர் பாஸ்கரன் சபதம்
ADDED : அக் 03, 2011 10:47 PM
ராமநாதபுரம் : ''நேரு நகரில் கழிவுநீர் தேங்கும் பிரச்னைக்கு நிரந்த தீர்வு காணப்படும்,'' என சக்கரகோட்டை ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாஸ்கரன் கூறினார்.
சக்கரக்கோட்டை ஊராட்சிக்கு கண் கண்ணாடி சின்னத்தில் போட்டியிடும், அவர் கூறியதாவது: ஏற்கனவே ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் எட்டாவது வார்டு கவுன்சிலராக இருந்தேன். அப்போது சேது நகர், சக்கரகோட்டை, மேல சோத்தூரணி, கீழ சோத்தூரணி, இபுராகீம் சேட் நகர் போன்றவற்றில் சாலைகள் அமைத்தேன். கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், சக்கரக்கோட்டைக்கு செல்லும் வழியில் பாலம் அமைத்து கொடுத்தேன். வெற்றி பெற்றால், முதல் வேலையாக நேரு நகர் மக்களை வாட்டி வதைக்கும் மழை நீர் தேங்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக வாறுகால் அமைக்கப்படும். மெட்டல் ரோடுகள், தார்ரோடாக மாற்றப்படும். மின் விளக்குகளை சொந்த செலவில் சரி செய்வேன். இதற்காக தனி எலக்ட்ரிசியன் நியமிக்கப்படுவார். அரசு சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். என்னை அழைத்தாலும், அழைக்காவிட்டாலும், தேடி சென்று உதவி செய்வேன். சக்கரக்கோட்டை, வாணி ஊரணியில் ஆகாய தாமரைகள் அகற்றப்படும். சிமென்ட் ரோடு அமைக்கபடும். மக்களுடன் மக்களாக பழகுவேன், சொல்வதை செய்வேன்; சொல்லாததையும் செய்வேன், என்றார்.


