ADDED : அக் 04, 2011 11:39 PM
குஜிலியம்பாறை:திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே குளத்தில் குளிக்க
சென்ற, மூன்று மாணவர்கள் மூழ்கி இறந்தனர்.இங்குள்ள சேர்வைக்காரன்பட்டியை
சேர்ந்த சிங்கராஜ் மகன் ராஜ்குமார், 10, சந்திரன் மகன் சக்திவேல்,
மருதமுத்து மகன் கார்த்திக்.
அரசுப்பள்ளியில் 5 ம் வகுப்பு படித்தனர்.
நேற்று மதியம் 3 மணிக்கு, அருகே உள்ள சங்குபிள்ளை குளத்தில் குளிக்க
சென்று, மூழ்கி இறந்தனர். பெற்றோர் நீண்ட நேரம் தேடி, இரவு 9 மணிக்கு
குளத்தில் உடல்கள் மீட்கப்பட்டன. இன்ஸ்பெக்டர் சக்திவேல் விசாரிக்கிறார்.


