காங்., மாஜி எம்.பி.,ஓட்டு சேகரிப்பு
காங்., மாஜி எம்.பி.,ஓட்டு சேகரிப்பு
காங்., மாஜி எம்.பி.,ஓட்டு சேகரிப்பு
ADDED : அக் 13, 2011 03:10 AM
கிள்ளை:''காங்கிரஸ் மக்களுக்காக உழைக்கும் பேரியக்கம்'' என முன்னாள்
எம்.பி., பேசினார்.கிள்ளை பேரூராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும்
பாலுவுக்கு ஆதரவாக கடைவீதியில் ஓட்டு கேட்டு முன்னாள் எம்.பி., வள்ளல்
பெருமான் பேசுகையில், 'கிராமங்கள் நகரங்களுக்கு இணையாக முன்னேற வேண்டும் என
மறைந்த பிரதமர் ராஜிவ்காந்தி கொண்டு வந்தது தான் பஞ்சாயத்து ராஜியம்.
இன்று தேசிய ஊராக வேலை உறுதி திட்டம் மத்திய அரசு கொண்டு வந்தது.
மக்களுக்காக உழைக்கும் பேரியக்கம் காங்., கட்சி. மத்திய அரசுதான் நிதி
ஒதுக்கும், ஆளும் கட்சி நிதி ஒதுக்கும் என்பதை நம்பாதீர்கள். மத்திய அரசின்
நிதியை பெற்று இப்பகுதியின் வளர்ச்சிக்கு பாடுபடவே காங்., கட்சி வேட்பாளரை
நிறுத்தியுள்ளோம்' என்றார்.


