/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/கிராமப்புற வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றத்திற்காக உழைப்பேன் : வேட்பாளர் ராஜரீகா பேச்சுகிராமப்புற வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றத்திற்காக உழைப்பேன் : வேட்பாளர் ராஜரீகா பேச்சு
கிராமப்புற வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றத்திற்காக உழைப்பேன் : வேட்பாளர் ராஜரீகா பேச்சு
கிராமப்புற வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றத்திற்காக உழைப்பேன் : வேட்பாளர் ராஜரீகா பேச்சு
கிராமப்புற வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றத்திற்காக உழைப்பேன் : வேட்பாளர் ராஜரீகா பேச்சு
ADDED : அக் 13, 2011 09:27 PM
கல்லல் : கல்லல் ஒன்றியம் மாவட்ட கவுன்சிலர் 5 வது வார்டுக்கு சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் எஸ்.ராஜரீகா கல்லல் பகுதியில் பிரச்சாரம் செய்தார்.
அவர் பேசியதாவது: நான் வெற்றி பெற்றால் அடிப்படை பிரச்னை,உரிமைகளை போராடி பெற்றுத்தர உழைப்பேன். மகளிர் சுய உதவிக்குழு அமைப்பை மக்கள் அமைப்பாக ஒருங்கிணைத்து மக்களின் பல்வேறு பிரச்னைகளில் சில பிரச்னைகளுக்கு மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இன்னும் நம் பகுதியில் பல்வேறு வசதி மற்றும் உரிமைகள் பெற வேண்டும். அதற்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்றால் மட்டுமே முடியும். உங்களின் பிரதிநிதியாக நான் வெற்றி பெற்றால் கல்லலில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்படும். இங்கிருந்து கருங்குளம், வாவாரி, கீழ்ப்பூங்குடி, வேப்பங்குளம், தேவபட்டு, நெற்புகப்பட்டு, ஊகம்பட்டி, சாத்தம்பத்தி, கூமாச்சிபட்டி, மீனாட்சிபுரம் போன்ற பகுதிகளுக்கு கூடுதல் பஸ் வசதி செய்து தர பாடுபடுவேன்.என்றார்.


