Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/தி.மு.க., சேர்மன் வேட்பாளர் திட்ட பணிகளை கூறி பிரச்சாரம்

தி.மு.க., சேர்மன் வேட்பாளர் திட்ட பணிகளை கூறி பிரச்சாரம்

தி.மு.க., சேர்மன் வேட்பாளர் திட்ட பணிகளை கூறி பிரச்சாரம்

தி.மு.க., சேர்மன் வேட்பாளர் திட்ட பணிகளை கூறி பிரச்சாரம்

ADDED : அக் 14, 2011 01:35 AM


Google News

நாமக்கல்: நாமக்கல் நகராட்சி, 9, 10, 11, 13, 14, 20 ஆகிய வார்டுகளில், தி.மு.க., சேர்மன் வேட்பாளர் செல்வராஜ், கவுன்சிலர் வேட்பாளர்களுடன் திரளாக சென்று ஓட்டு சேகரித்தார்.

கடந்த ஐந்தாண்டுகளில் செய்த திட்டப் பணிகளை விளக்கிக் கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்ட வேட்பாளர் செல்வராஜூக்கு, மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.



நகராட்சி வார்டுகளில் வேட்பாளர் செல்வராஜ் பேசியதாவது: நாமக்கல் நகராட்சித் சேர்மனாக, கடந்த 2006ம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு, 13 கோடியே 27 லட்சம் ரூபாய மதிப்பில் புதிய குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 2010ம் ஆண்டு, ஜனவரி 18ம் தேதி, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. மேலும், 3 கோடியே 58 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் துவக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வீடு மற்றும் குடிசைப் பகுதி மேம்பாட்டு திட்டம், 5 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பில் துவக்கப்பட்டு, பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ளது. 50 லட்சம் ரூபாய் மதிப்பில், நவீன அறுவைக் கூடமும் கட்டப்பட்டுள்ளது. இடை நிரப்பு நிதி திட்டத்தின் கீழ், 35 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மேல்நிலை குடிநீர் தொட்டிகள் உள்ள ஐந்து இடங்களில் சுற்றுச்சுவர் மற்றும் வாட்ச்மேன் அறைகள் கட்டப்படுகிறது. அதில் இரண்டு பணிகள் முடிவடைந்துள்ளன. போக்குவரத்து செயல்பாடுகள் மற்றும் மேலாண்மைத் திட்டப் பணிகள், 37 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் மதிப்பில் துவங்கப்பட்டு, மூன்று உயர்மின் கோபுர விளக்குகள் மற்றும் தார்சாலை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. இவ்வாறு அவர் பேசினார். கவுன்சிலர் வேட்பாளர்கள் தீபா வேல்முருகன், பூபதி, சரவணன், சேக்நவீத், கமலா, ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us