/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/சிவகிரியில் காங்.,வேட்பாளர் பிரசாரம்சிவகிரியில் காங்.,வேட்பாளர் பிரசாரம்
சிவகிரியில் காங்.,வேட்பாளர் பிரசாரம்
சிவகிரியில் காங்.,வேட்பாளர் பிரசாரம்
சிவகிரியில் காங்.,வேட்பாளர் பிரசாரம்
ADDED : அக் 14, 2011 02:38 AM
சிவகிரி:சிவகிரி டவுன் பஞ்., தலைவர் பதவிக்கு போட்டியிடும் காங்.,
வேட்பாளர் சேதுராஜா வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டினார்.சிவகிரி டவுன்
பஞ்.,சில் காங்., சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பொறியாளர்
சேதுராஜா சிவகிரியில் உள்ள குமாரபுரம், சிவராமலிங்கபுரம், நாடார் கடைபஜார்
தெரு, தர்மபுரி, வடக்கு சத்திரம், அம்பேத்கார் தெரு, கக்கன் தெரு உட்பட
நகரில் உள்ள 18 வார்டுகளில் கை சின்னத்தில் வாக்களிக்குமாறு வீடு வீடாகச்
சென்று ஓட்டுகள் சேகரித்தார்.பிரசாரத்தில் வேட்பாளர் சேதுராஜா கூறியதாவது:-
''சிவகிரி கோம்பை ஆற்றிலிருந்து நீர்த்தேக்க தொட்டிக்கு கூடுதலாக புதிய
பைப் லைன் அமைத்து குடிநீர் தடையில்லாமல் வழங்கப்படும். அனைவருக்கும் எல்லா
நேரங்களிலும் அரசு மருத்துவமனை வசதிகள், சாலை வசதிகள், மின்சாரம் போன்றவை
செய்துதரப்படும். நகரில் பெண்கள், சிறுவர்கள், பொழுது போக்க பூங்காக்கள்
அமைக்கப்படும். டவுன் பஞ்.,அலுவலகத்தில் கொடுக்கப்படும் வீடு கட்டுவதற்கான
பிளான் அப்ரூவல் செய்தல், பிறப்பு இறப்பு சான்று வழங்குதல், தீர்வை ரசீது
போன்றவற்றை விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பேன். ஒவ்வொரு மாதமும் மக்கள்
குறைதீர்க்கும் நாள் நடத்தி குறைகள் தீர்க்கப்படும். விவசாயிகளின் குறைகள்
தீர்க்கப்படும். சமுதாய நலக்கூடங்கள் கட்டப்படும்'' என்றார்.
அவருடன் மாவட்ட
காங்., பொது செயலாளரும், டவுன் பஞ்., தலைவருமான போஸ், வாசு., வட்டார
தலைவர் திருஞானம், நகர தலைவர் கணேசன், முன்னாள் தலைவர் குருசாமிபாண்டியன்,
வாசு., வட்டார பொது செயலாளர் பரமசிவம், இளைஞர் காங்., தலைவர் காளியப்பன்,
நகர பொது செயலாளர் கென்னடி, குடல் மாரியப்பன், காளைபாண்டியன், இளைஞர்
காங்., பொது செயலாளர் சேகர், கருப்பசாமி, இளைஞர் காங்., துணைத் தலைவர்
ஆறுமுகம், அன்புதுரை, சவுந்தர், வேல்ச்சாமி, உத்திரன், குமார், மருதப்பன்,
வேட்பாளர்கள் காளியப்பன், குடல் மாரியப்பன், கருப்பசாமி, முருகன், விஜயன்,
நர்மதாதேவி, அன்புத்துரை, சித்திரைவடிவு, வேலுச்சாமி, மரகதம்,
ராமசுந்தரம்மாள், உலகநாதன், மேடை கருப்பசாமி, வேலுச்சாமி, தேமுதிக சார்பில்
நகர செயலாளர் சவுந்திரராஜன், இளைஞரணி முனியாண்டி உள்பட ஏராளமானோர் கலந்து
கொண்டனர்.


