/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வடக்கு ஒன்றிய தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடுவடக்கு ஒன்றிய தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு
வடக்கு ஒன்றிய தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு
வடக்கு ஒன்றிய தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு
வடக்கு ஒன்றிய தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு
ADDED : செப் 28, 2011 12:09 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், 39 ஊராட்சிகள் உள்ளன.
இதிலிருந்து 17 ஒன்றிய கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில், 1,3, 5,6, 8, 12, 15,16,17 ஆகிய வார்டுகள் பொது ஒதுக்கீடாகவும், 2,4, 9, 14 ஆகிய வார்டுகள் பொது பிரிவில் பெண்களுக்கும், 7, 13 ஆகிய வார்டுகள் ஆதிதிராவிட பெண்களுக்கும், 10,11 ஆகிய வார்டுகள் ஆதி திராவிட பொது பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு, 13வது வார்டு பொது பிரிவு பெண்களுக்கும், 14வது வார்டு பொது பிரிவு பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றியத்திற்குட்பட்ட 39 ஊராட்சிகளின் தலைவர்
பதவியில், ஐந்து ஊராட்சிகள் ஆதிதிராவிடர் பொது பிரிவுக்கும், மூன்று ஊராட்சிகள் ஆதிதிராவிட பெண்களுக்கும், 10 ஊராட்சிகள் பொது பிரிவு பெண்களுக்கும், 21 ஊராட்சிகள் பொது பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதுதவிர, ஊராட்சி கவுன்சிலர் பதவியில், பழங்குடியின பிரிவில் ஒருவருக்கும், 26 இடங்கள் ஆதிதிராவிட பெண்கள் பிரிவுக்கும், 43 இடங்கள் ஆதிதிராவிட பொது பிரிவுக்கும், 75 இடங்கள் பொது பிரிவு பெண்களுக்கும், 158 இடங்கள் பொது பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒன்றியத்தில் தலைவர் பதவி பொது பிரிவு பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இத்தகவலை ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.