தி.மு.க., அ.தி.மு.க., "இளைஞரணி' மோதல்
தி.மு.க., அ.தி.மு.க., "இளைஞரணி' மோதல்
தி.மு.க., அ.தி.மு.க., "இளைஞரணி' மோதல்
ADDED : ஆக 14, 2011 04:39 AM
மதுரை:மதுரை கே.புதூர் தி.மு.க., வட்டச் செயலாளர் வேலு மகன்
முத்துப்பாண்டி.
ஒன்றாம் பகுதி இளைஞரணி அமைப்பாளர். இவரது நண்பர்
செந்தில்குமார். மூன்றாவது வார்டு அ.தி.மு.க., இளைஞரணி செயலாளர். இவர்கள்
நண்பர்கள் கருப்பையா, முத்துமாரி மற்றும் சிலருடன் டோபிகாலனி மதுக்கடை
அருகில் மது அருந்தினர். தி.மு.க., பிரமுகர்கள் கைது பற்றி பேசியபோது,
அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. ஆயுதங்களாலும்
தாக்கினர். இதில் செந்தில்குமார், கருப்பையா மற்றும் முத்துப்பாண்டிக்கு
காயம் ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீஸ் துணை
கமிஷனர் திருநாவுக்கரசு, உதவி கமிஷனர் வெள்ளத்துரை மற்றும் போலீசார்
விசாரித்து வருகின்றனர்.