Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/சேலம், தர்மபுரியில் இருந்து திருப்பதிக்கு வரும் 27 முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

சேலம், தர்மபுரியில் இருந்து திருப்பதிக்கு வரும் 27 முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

சேலம், தர்மபுரியில் இருந்து திருப்பதிக்கு வரும் 27 முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

சேலம், தர்மபுரியில் இருந்து திருப்பதிக்கு வரும் 27 முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

ADDED : செப் 16, 2011 01:39 AM


Google News

சேலம்: 'தமிழக அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டத்தின் சார்பில், செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 7 வரை, சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்' என, சேலம் கோட்ட பொது மேலாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டத்தின் சார்பில், சேலம், தர்மபுரியில் இருந்து திருப்பதிக்கு, செப்டம்பர் 27 முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

சேலம்-திருப்பதி, தர்மபுரி-திருப்பதி, கிருஷ்ணகிரி-திருப்பதி, ஓசூர்-திருப்பதி மற்றும் சின்னத் திருப்பதி, நைனாமலை ஆகிய இடங்களுக்கு கூட்ட நெரிசலுக்கு ஏற்ப வெள்ளி, சனிக்கிழமைகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு பஸ்கள், செப்டம்பர் 17, 24, அக்டோபர் 1, 8, 15 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. சேலம், ஓமலூர், தாரமங்கலம், மேட்டூர் ஆகிய இடங்களில் இருந்து சின்னதிருப்பதிக்கும், சேலம், ராசிபுரம், நாமக்கல், ஆட்டையாம்பட்டி ஆகிய இடங்களில் இருந்து நைனாமலைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.



* சேலம் மாநகரில் இயங்கி வரும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்ட பஸ்களுக்கு சலுகை கட்டண அட்டைகள் வழங்கப்படுகிறது. ஒரு நாள் முழுவதும் பயணம் செய்ய பயணக் கட்டம், 30 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும். ஒருவாரம் முழுவதும் பயணம் செய்ய சலுகை கட்டண அட்டை வழங்கப்பட்ட நாளிலிருந்து பயணக் கட்டணம், 160 ரூபாய் மட்டும் செலுத்தி அட்டை பெற்றுக் கொள்ளலாம். ஒரு மாதம் முழுவதும் பயணம் செய்ய (சலுகை கட்டண அட்டை வழங்கப்பட்ட நாளில் இருந்து ), 600 ரூபாய் செலுத்தி பயண அட்டை பெற்றுக் கொள்ளலாம். இந்த சலுகைகள், சேலம் மாநகரில் இயக்கப்படும் நகர பேருந்துகளுக்கும், சேலம் மாநகரத்தை வந்தடையும் நகரப் பஸ்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த சலுகை கட்டண அட்டைகள் அனைத்தும், சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us