மொபைல்போன் வியாபாரி கழுத்து அறுத்துக்கொலை
மொபைல்போன் வியாபாரி கழுத்து அறுத்துக்கொலை
மொபைல்போன் வியாபாரி கழுத்து அறுத்துக்கொலை
ADDED : அக் 07, 2011 09:28 PM
தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே மொபைல்போன் வியாபாரி, மர்ம நபர்களால் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அடுத்த பிரகாசபுரத்தை சேர்ந்தவர் ஐசக், 45. மொபைல் போன் வியாபாரி. இவரது மனைவி வசந்தா, குழந்தைகள் கோவையில் வசிக்கின்றனர். ஐசக் தனது தாயுடன் பிரகாசபுரம் வீட்டில் வசித்தார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணியளவில் வியாபாரத்தை முடித்து விட்டு வந்த ஐசக், வீட்டிற்குள் செல்லமுயன்றபோது அவரை, மர்மநபர்கள் வழிமறித்தனர். அவர்கள் ஐசக் கழுத்தை கத்தியால் அறுத்து, அவர் அணிந்திருந்த தங்கச்செயின், மோதிரத்தை பறித்தனர். அப்போது, ஐசக்கின் அலறல் குரல் கேட்டு, தாயார் ரஞ்சிதம், அக்கா எப்சி வெளியே வந்து பார்த்தனர்.
அதற்குள், மர்ம நபர்கள் செயின்,மோதிரத்தை போட்டுவிட்டு தப்பி ஓடினர். ஐசக், ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். நகைக்காக ஐசக்கை கொலை செய்தனரா, அல்லது கொலைக்கு வேறுகாரணங்கள் உள்ளதா? என விசாரித்து வரும் நாசரேத் போலீசார், மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.


