Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/அரவக்குறிச்சி பஞ்., யூனியனில் 188 பதவிக்கு 353 பேர் போட்டி

அரவக்குறிச்சி பஞ்., யூனியனில் 188 பதவிக்கு 353 பேர் போட்டி

அரவக்குறிச்சி பஞ்., யூனியனில் 188 பதவிக்கு 353 பேர் போட்டி

அரவக்குறிச்சி பஞ்., யூனியனில் 188 பதவிக்கு 353 பேர் போட்டி

ADDED : அக் 11, 2011 01:51 AM


Google News
க.பரமத்தி: அரவக்குறிச்சி யூனியனில் மாவட்ட கவுன்சிலர், யூனியன் கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர் உள்ளிட்ட 188 பதவிகளுக்கு இறுதி பட்டியலில் 353 பேர் களத்தில் உள்ளனர்.

பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர்கள் 74 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.அரவக்குறிச்சி பஞ்சாயத்து யூனியன் பகுதியில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு ஒரு இடமும், யூனியன் கவுன்சிலர் பதவிக்கு 11 இடங்களும், பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 20 இடங்களும், வார்டு கவுன்சிலர் பதவிக்கு 156 இடங்கள் என மொத்தம் 188 பதவிகளுக்கு வேட்பு மனுதாக்கல் செய்தனர். மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு நான்கு வேட்பாளரும், யூனியன் கவுன்சிலர் பதவிக்கு 37 பேரும் களத்தில் உள்ளனர்.பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு 113 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டு 34 பேர் வேட்பு மனுவை திரும்ப பெற்றதால் 79 பேர் களத்தில் உள்ளனர். பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் 156 பதவிகளில், 74 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us