திருத்தணி நகராட்சி, ஒன்றியத்தில் போட்டியிடதி.மு.க., - பா.ம.க.,வில் ஆர்வமில்லை
திருத்தணி நகராட்சி, ஒன்றியத்தில் போட்டியிடதி.மு.க., - பா.ம.க.,வில் ஆர்வமில்லை
திருத்தணி நகராட்சி, ஒன்றியத்தில் போட்டியிடதி.மு.க., - பா.ம.க.,வில் ஆர்வமில்லை
ADDED : அக் 09, 2011 10:51 PM
திருத்தணி:திருத்தணி நகராட்சி வார்டுகளில் சிலவற்றில் போட்டியிட பா.ம.க., விலும், ஒன்றியத்தில் சிலவற்றில் போட்டியிட தி.மு.க.,விலும் வேட்பாளர்கள் இல்லாததால், கட்சித் தொண்டர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.திருத்தணி நகராட்சியில் ஒரு தலைவர் மற்றும் 21 வார்டு கவுன்சிலர் பதவிக்கு, வரும் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில், நகராட்சித் தலைவர் பதவிக்கு தி.மு.க., - அ.தி. மு.க., - தே.மு.தி.க., - பா.ம.க., - காங்., மற்றும் பா.ஜ., ஆகிய கட்சிகள் சார்பில் ஆறு பேரும், சுயேச்சை வேட்பாளர் ஒருவர் என, மொத்தம் ஏழு பேர் போட்டியிடுகின்றனர்.
கவுன்சிலர் பதவிக்கு, தி.மு.க., - அ.தி.மு.க., மற்றும் தே.மு.தி.க., ஆகிய மூன்று கட்சிகளும் 21 வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பா.ம.க., மூன்று வார்டுகளில் மட்டுமே போட்டியிடுகிறது. மீதமுள்ள 18 வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட யாரும் முன்வரவில்லை. காங்கிரஸ் ஏழு வார்டுகளிலும், ம.தி.மு.க., ஆறு வார்டுகளிலும், பி.எஸ்.பி., ஒரு வார்டிலும் போட்டியிடுகிறது.அதே போல் திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு மாவட்ட கவுன்சிலர், 12 ஒன்றிய கவுன்சிலர், 27 ஊராட்சித் தலைவர், 219 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. இங்கு, கடந்த முறை ஆளும் கட்சியான தி.மு.க., 12 ஒன்றிய கவுன்சிலர்களில் ஒன்பது ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மட்டும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
மீதமுள்ள மூன்று (மத்தூர், வீரகநல்லூர், பட்டாபிராமபுரம்) ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க., சார்பில் போட்டியிட, யாரும் விருப்ப மனு கொடுக்கவில்லை மற்றும் வேட்பாளர்களும் நிறுத்தப்படவில்லை. பெரிய கட்சியான தி.மு.க.,வில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட ஆள் இல்லாததால், கட்சித் தொண்டர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இதே போல் 12 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு பா.ம.க., நான்கு இடங்களிலும், காங்கிரஸ் ஏழு இடங்களிலும்,தே.மு.தி.க., 11 இடங்களிலும் போட்டியிடுகிறது. பா.ஜ., சார்பில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு யாரும் போட்டியிடவில்லை.


