வேட்பாளர்களுக்கு முக்கிய கட்சிகள் பட்டுவாடா:உதிரி கட்சி வேட்பாளர்கள் புலம்பல்
வேட்பாளர்களுக்கு முக்கிய கட்சிகள் பட்டுவாடா:உதிரி கட்சி வேட்பாளர்கள் புலம்பல்
வேட்பாளர்களுக்கு முக்கிய கட்சிகள் பட்டுவாடா:உதிரி கட்சி வேட்பாளர்கள் புலம்பல்

மதுரை மாநகராட்சியில் போட்டியிடும் கவுன்சிலர் வேட்பாளர்களுக்கு, கட்சிகள் சார்பில் தேர்தல் செலவுக்கு பணம் வழங்கப்பட்டதையடுத்து உற்சாகத்துடன் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். உதிரி கட்சிகளில் பணம் கிடைக்காமல் வேட்பாளர்கள் புலம்புகின்றனர்.தேர்தல்களில் 'ப வைட்டமின்' இறக்கி விடுவதையடுத்து தேர்தல் பணிகள் சூடுபிடிக்கும். உள்ளாட்சிதேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், பணிகள் சூடுபிடித்துள்ளன. குறிப்பாக மாநகராட்சியில் அதிக கவுன்சிலர்களை பெற வேண்டும் என்பதில் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., முனைப்பு காட்டி வருகின்றன. மேயர் மட்டுமின்றி கவுன்சிலர்களுக்கும் ஆட்களை நிறுத்திய காங்., பா.ஜ., முடிந்தளவுக்கு கட்சியினரைமுடுக்கிவிட்டுள்ளது.அ.தி.மு.க., தரப்பில் கவுன்சிலர்
வேட்பாளர்களுக்கு ரூ.ஒரு லட்சம் முதற்கட்டமாக வழங்கப்பட்டதால், உற்சாகத்துடன் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதில் பாதி தொகை, தி.மு.க., தரப்பில் வழங்கப்பட்டது. காங்., சார்பில் வேட்பாளர்களுக்கு முதற்கட்டமாக ரூ.ஐயாயிரம், இரண்டாவது கட்டமாக ரூ.ஐயாயிரம் வரை வழங்கப்பட்டது. இந்த தொகையை வைத்து இரண்டு வேளைக்கு 100 பேருக்கு மதிய உணவு வாங்கி கொடுத்தாலே காலியாகி விடும் என வேட்பாளர்கள் புலம்புகின்றனர். தே.மு.தி.க., சார்பில் பணம் குறித்த விஷயங்கள் வெளியில் கசிந்து
விடாதபடி ரகசியம் காக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசியல் இமேஜை நிலை நிறுத்தி கொள்ள வேட்பாளர்களை நிறுத்தியுள்ள மற்ற சில கட்சிகளில், வேட்பாளர்களே தங்கள் சொந்த பணத்தை செலவு செய்வதால், புலம்பும் நிலையில் உள்ளனர். தேர்தல் நெருங்கும் நிலையில் அடுத்த கட்டமாக பணத்தை இறக்கவும் அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. -நமது சிறப்பு நிருபர்-


