ரூ.5 லட்சம் நில மோசடி: இருவர் கைது
ரூ.5 லட்சம் நில மோசடி: இருவர் கைது
ரூ.5 லட்சம் நில மோசடி: இருவர் கைது
திருவள்ளூர் : விற்ற நிலத்தை மீண்டும் மற்றொருவருக்கு விற்று மோசடி செய்த இருவரை திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இதற்கான பட்டா, சிட்டா, அடங்கல் ஆகியவற்றையும் தன் பெயரில் மாற்றியுள்ளார். இந்நிலையில் இந்த, 8.50 ஏக்கர் நிலத்தில் 64 செண்ட் நிலத்தை மட்டும் பத்மநாபன் மற்றும் அவரது மகன்கள், பேட்டையைச் சேர்ந்த நில புரோக்கர் வரதப்பிள்ளை மகன் பூபதி என்பவர் தூண்டுதலின்பேரில் சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த சின்னசாமி மகன் கோவிந்தராஜன் என்பவருக்கு விற்று கிரையம் செய்து ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து, பார்த்தசாரதி கொடுத்த புகாரின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்கு பதிந்து, நில மோசடியில் ஈடுபட்ட வாசு, 32, பூபதி, 34 ஆகிய இருவரையும் கைது செய்து, கோர்ட் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பத்மநாபன் உள்ளிட்ட நான்கு பேரை தேடி வருகின்றனர்.


