/உள்ளூர் செய்திகள்/திருச்சி/திருச்சியில் தேர்தல் விதிமுறை மீறியதாக 241 வழக்குப்பதிவு: தி.மு.க., முன்னிலைதிருச்சியில் தேர்தல் விதிமுறை மீறியதாக 241 வழக்குப்பதிவு: தி.மு.க., முன்னிலை
திருச்சியில் தேர்தல் விதிமுறை மீறியதாக 241 வழக்குப்பதிவு: தி.மு.க., முன்னிலை
திருச்சியில் தேர்தல் விதிமுறை மீறியதாக 241 வழக்குப்பதிவு: தி.மு.க., முன்னிலை
திருச்சியில் தேர்தல் விதிமுறை மீறியதாக 241 வழக்குப்பதிவு: தி.மு.க., முன்னிலை
ADDED : அக் 08, 2011 11:42 PM
திருச்சி: வரும் 13ம் தேதி நடக்கவுள்ள திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலுக்காக நடக்கும் பிரச்சாரத்தில், தேர்தல் விதிமுறை மீறியதாக 241 வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.திருச்சி மேற்கு சட்டசபைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 13ம் தேதி நடக்கிறது.
இதில் தி.மு.க., சார்பில், முன்னாள் அமைச்சர் நேருவும், அ.தி.மு.க., சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., பரஞ்ஜோதியும் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். தவிர உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரமும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலே, தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது. தற்போது மேற்கு தொகுதி இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சியினர் தேர்தல் விதிமுறைகளை மீறி வருகின்றனர்.இதுதொடர்பாக மாநகர போலீஸாரும் அவ்வபோது வழக்குகளை பதிவு செய்து வருகின்றனர். மாநகர போலீஸார் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக இதுவரை மொத்தம் 241 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.இதில், ஆளுங்கட்சியான அ.தி.மு.க., மீது 53 வழக்குகளும், தி.மு.க., 77, தே.மு.தி.க., 36, இந்திய கம்யூனிஸ்ட் 31, ம.தி.மு.க., 17, காங்கிரஸ் 15, மார்க்சிஸ்ட் 1, வி.சி., 1 என மொத்தம் 231 தேர்தல் விதிமுறை மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிக வாகனங்களை பயன்படுத்தியதாக அ.தி.மு.க., மீது ஆறு வழக்கும், தி.மு.க., மீது மூன்று வழக்கும், தே.மு.தி.க., மீது ஒரு வழக்கும் என மொத்தம் 10 வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் திருச்சி மாநகர போலீஸார் மட்டும் 241 தேர்தல் விதிமுறை மீறல் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவற்றில் பெரும்பாலானது மேற்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்புடையதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


