/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/பஞ்., அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க பிச்சை கேட்டு நூதன போராட்டம்பஞ்., அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க பிச்சை கேட்டு நூதன போராட்டம்
பஞ்., அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க பிச்சை கேட்டு நூதன போராட்டம்
பஞ்., அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க பிச்சை கேட்டு நூதன போராட்டம்
பஞ்., அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க பிச்சை கேட்டு நூதன போராட்டம்
நாகர்கோவில் : கலெக்டர் அலுவலகத்தில் உள்ள டவுன் பஞ்., அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க தட்டு ஏந்தி பிச்சை கேட்டு நூதன போராட்டம் குமரி கலெக்டர் அலுவலத்திலே நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முளகுமூடு வெள்ளிகோடு நெடும்பாறா கார்டன் ரோடை சேர்ந்தவர் ஹோமர்லால்.
இந்த நூதன போராட்டம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. போராட்டத்திற்கான காரணம் குறித்து விசாரித்தபோது அவர் கலெக்டரிடம் கொடுக்க வைத்திருந்த புகார் மனுவின் மூலம் தெரியவந்தது. அதில்; முளகுமூடு டவுன் பஞ்சாயத்து டெண்டர் மூலம் பெற்ற நெடும்பாறக்காட்டுவிளையில் சிறுமின் விசைதிட்டத்தை சாலை ஓரம் மாற்றும் பணிக்கு ரூ.45 ஆயிரம் மதிப்பீடு பெற்று பணிகளை செய்து முடித்தேன். ஆனால் பணி அளவீடு செய்து தொகை விவரப்பட்டியல் தயாரிக்க கூறும்போது என்னை அலைக்கழித்தனர். ஒஒரே பணிக்கு இரண்டு பில் தயார் செய்து எனது பெயரில் வங்கியில் செலுத்தி பணம் பெற்றுத்தருமாறு மிரட்டினர். ஒரு பணிக்கு இரு பில்போட்டு அரசை ஏமாற்றி ஊழல் செய்ய என்னையும் தூண்டினர். மறுத்தால் ஒப்பந்த பணிக்கான பில்லில் கையெழுத்து போட மறுத்தனர். மேலும் என்னிடம் லஞ்சம் கேட்டு மிரட்டினர். மேலும் பணி முடிந்து இரு மாதங்கள் ஆன பின்பும் ஒப்பந்த பணிக்கான பில்களில் குளறுபடி செய்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட டவுன் பஞ்சாயத்து உதவி செயற்பொறியாளர், இளநிலை பொறியாளர் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் ஹோமர்லால் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் ஒரே பணிக்கு இரண்டு பில் போட்டதற்கான மெசர்மன்ட் புத்தகங்கள், ஆவணங்களின் நகல்களையும் புகாருடன் இணைத்திருந்தார். சுமார் 15 நிமிடம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் டவுன் பஞ்சாயத்து உதவி செயற்பொறியாளருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று தட்டு ஏந்தி பிச்சை எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


