/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/புத்தூர் ரோட்டை இருவழியாக மாற்ற வலியுறுத்தல்புத்தூர் ரோட்டை இருவழியாக மாற்ற வலியுறுத்தல்
புத்தூர் ரோட்டை இருவழியாக மாற்ற வலியுறுத்தல்
புத்தூர் ரோட்டை இருவழியாக மாற்ற வலியுறுத்தல்
புத்தூர் ரோட்டை இருவழியாக மாற்ற வலியுறுத்தல்
ADDED : ஜூலை 14, 2011 11:49 PM
தளவாய்புரம் : தளவாய்புரத்திலிருந்து புத்தூர் வரை செல்லும் ரோடு இருவழி பாதையாக மாற்ற வேண்டும்.
தளவாய்புரத்திலிருந்து புத்தூர் வரை செல்லும் ரோடு மூன்று கிலோ மீட்டர் தூரம் உள்ளது.தற்போது இந்த ரோடு ஒரு வழி பாதையாக உள்ளது.புத்தூர்,மீனாட்சியாபுரம் பகுதிகளில் தற்போது பல்வேறு தொழிற் சாலைகள் இயங்கி வருகின்றன.சுற்று வட்டரா மக்கள் வெளியூர் செல்ல இந்த ரோஐ முக்கியமானதாக உள்ளது. ரோட்டில் தற்போது வாகனப்போக்குவரத்து அதிகரித்துள்ளது.இதனால் பஸ் மற்றும் கனராக வாகனங்கள் எதிரே வரும்போது ரோட்டை விட்டு இறங்கி நின்று செல்ல வேண்டியது உள்ளது. ரோட்டின் ஓரங்களில் முட்செடிகள் வளர்ந்து காணப்படுகின்றன. மக்கள் சிரமமின்றி வாகனத்தில் சென்று வரவும்,விபத்துகள் ஏற்படாமல் தடுக்கவும் சம்மந்தப்பட்ட ரோட்டை இரு வழி பாதையாக மாற்ற துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் .