/உள்ளூர் செய்திகள்/திருச்சி/மும்பை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி போலீஸ் வளையத்தில் திருச்சி முக்கிய இடங்கள்மும்பை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி போலீஸ் வளையத்தில் திருச்சி முக்கிய இடங்கள்
மும்பை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி போலீஸ் வளையத்தில் திருச்சி முக்கிய இடங்கள்
மும்பை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி போலீஸ் வளையத்தில் திருச்சி முக்கிய இடங்கள்
மும்பை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி போலீஸ் வளையத்தில் திருச்சி முக்கிய இடங்கள்
ADDED : ஜூலை 15, 2011 12:03 AM
திருச்சி: மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பை அடுத்து திருச்சியில் விமானநிலையம், ரயில்வே ஸ்டேஷன், பஸ்ஸ்டாண்ட், பிரசித்தபெற்ற கோவில்கள் என முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முக்கிய நகராக விளங்கும் மும்பையில் நேற்று முன்தினம் மாலை, 6.45 மணியளவில் ஜாவேரி பஜார், மத்திய மும்பையின் தாதர் பகுதியிலும், ஓபரா ஹவுஸ் என்ற இடத்திலும் தொடராக மூன்று சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்தது. இதில், இதுவரை, 20க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மும்பையின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மும்பையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததையடுத்து, இந்தியாவின் மற்ற நகரங்களில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க, அந்தந்த மாநில போலீஸார் மத்திய உளவுத்துறையால் உஷார்படுத்தப்பட்டனர். இதையடுத்து டில்லி, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதேபோல் மாநிலங்களில் இரண்டாவது பெரிய நகரங்களிலும் உஷார்நிலை மாநில போலீஸாரால் ஏற்படுத்தப்பட்டது. அதன்படி, திருச்சி விமானநிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு பணியில் மத்திய தொழிலக பாதுகாப்பு போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர். விமான நிலையம் உள்ளே செல்வோரையும், வெளியே செல்வோரும் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். அதேபோல், திருச்சி ரயில்வே ஸ்டேஷனிலும், சென்ட்ரல் பஸ்ஸ்டாண்டிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தவிர, மாநகரில் பல இடங்களில் வாகன சோதனையும், முக்கிய இடங்களில் போலீஸார் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை கேள்விப்பட்டதுமே அனைத்து மாவட்ட போலீஸாரும் மாநில போலீஸால் உஷார்படுத்தப்பட்டனர். அதன்படி, திருச்சி மாநகரிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஏற்பாடுகளை நேற்று முன்தினம் இரவு, 10 மணி முதல் அதிகாலை மூன்று மணி வரை ஒவ்வொரு இடமாக சென்று மாநகர போலீஸ் கமிஷனர் மாசானமுத்து பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.