/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கடலூர் அருகே அனுமதியின்றி கூழாங்கற்கள் கடத்தல்: லாரி பறிமுதல்கடலூர் அருகே அனுமதியின்றி கூழாங்கற்கள் கடத்தல்: லாரி பறிமுதல்
கடலூர் அருகே அனுமதியின்றி கூழாங்கற்கள் கடத்தல்: லாரி பறிமுதல்
கடலூர் அருகே அனுமதியின்றி கூழாங்கற்கள் கடத்தல்: லாரி பறிமுதல்
கடலூர் அருகே அனுமதியின்றி கூழாங்கற்கள் கடத்தல்: லாரி பறிமுதல்
ADDED : ஜூலை 25, 2011 11:12 PM
கடலூர் : கடலூர் அருகே அனுமதியின்றி கூழாங்கற்களை கடத்திச் சென்ற லாரியை வருவாய்த்துறை யினர் பறிமுதல் செய்தனர்.கடலூர் தாசில்தார் அசோகன், வருவாய் ஆய்வாளர் மகேஷ் மற்றும் வருவாய் துறையினர் நேற்று முன்தினம் இரவு 1.10 மணியளவில் கடலூரை அடுத்த குழந்தைகுப்பம் மெயின் ரோட்டில் லாரிகளை நிறுத்தி சோதøனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு லாரியில் அனுமதியின்றி கூழாங்கற்கள் ஏற்றி வந்த லாரியை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அதில் விலங்கல்பட்டு அடுத்த குழந்தைகுப்பத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ரவி, 25; அதே பகுதியைச் சேர்ந்த பன்னீர் என்பவரின் லாரி என்பதும் தெரியவந்தது.இதைத்தொடர்ந்து தாசில்தார் அசோகன் லாரியை பறிமுதல் செய்து தாலுக்கா அலுவலகத்தில் நிறுத்தினார்.மேல் நடவடிக்கைக்காக ஆர்.டி.ஓ.,விற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட கூழாங்கற்களின் மதிப்பு 40 ஆயிரம் ரூபாயாகும்.


