Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மூவரின் தூக்கு தண்டனை ரத்து இறுதி முடிவு முதல்வர் கையில் : கிருஷ்ணசாமி வேண்டுகோள்

மூவரின் தூக்கு தண்டனை ரத்து இறுதி முடிவு முதல்வர் கையில் : கிருஷ்ணசாமி வேண்டுகோள்

மூவரின் தூக்கு தண்டனை ரத்து இறுதி முடிவு முதல்வர் கையில் : கிருஷ்ணசாமி வேண்டுகோள்

மூவரின் தூக்கு தண்டனை ரத்து இறுதி முடிவு முதல்வர் கையில் : கிருஷ்ணசாமி வேண்டுகோள்

ADDED : ஆக 29, 2011 12:09 AM


Google News
Latest Tamil News
திருநெல்வேலி : ''தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் மூவரின் உயிர், காக்கப்படுவது முதல்வர் ஜெயலலிதா கையில் தான் உள்ளது,'' என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

அவர் நெல்லையில் கூறியதாவது: ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை, தூக்கு தண்டனையில் இருந்து விடுவிக்கவேண்டும் என பல்வேறு அமைப்புகளும் போராடி வருகின்றன. இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் தீர்மானம் உள்பட தமிழர்களுக்கு ஆதரவாக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறார். இதனால், உலக தமிழர்கள் மத்தியில் ஜெ., மீதான மரியாதை உயர்ந்திருக்கிறது.



அவருக்கு இந்த விஷயத்தில் இக்கட்டான சூழல் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மூவருக்கும் தூக்குதண்டனையை நிறுத்தவேண்டிய இறுதி முடிவு தமிழக முதல்வரின் கையில் உள்ளது. இதற்கு முன்பு கேரளாவில் சி.ஏ.பாலன் தூக்குதண்டனையும், ஆந்திராவில் இருவரது தூக்கு தண்டனையும் ரத்தாகியிருக்கிறது. எனவே, இந்திய அரசமைப்பு சட்டப்பிரிவு 161ன்படி, தமிழக அரசு மேற்கொள்ளும் முடிவின் அடிப்படையில், தூக்கு தண்டனை கைதிகள் விடுவிக்கப்படலாம். தமிழக அரசு அதற்கான முயற்சி மேற்கொள்ளவேண்டும், என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us