/உள்ளூர் செய்திகள்/திருச்சி/மாவட்ட விளையாட்டு போட்டி திருச்சியில் இன்று துவக்கம்மாவட்ட விளையாட்டு போட்டி திருச்சியில் இன்று துவக்கம்
மாவட்ட விளையாட்டு போட்டி திருச்சியில் இன்று துவக்கம்
மாவட்ட விளையாட்டு போட்டி திருச்சியில் இன்று துவக்கம்
மாவட்ட விளையாட்டு போட்டி திருச்சியில் இன்று துவக்கம்
ADDED : செப் 03, 2011 12:20 AM
திருச்சி: பொது மக்கள் மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்கும் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடக்கிறது.
திருச்சியில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று காலை 8 மணிக்கு துவங்குகிறது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தடகள போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், தடை தாண்டி ஓடுதல், நீளம் தாண்டுதல். உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உட்பட பல்வேறு போட்டிகள் நடக்கிறது. நீச்சல் போட்டி ப்ரீ ஸ்டைல், பேக் ஸ்ட்ரோக், பிரஸ்ட் ஸ்ட்ரோக், பட்டர்ஃபிளை போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடக்கிறது.
மாவட்ட விளையாட்டு அலுவலர் வெளியிட்ட அறிக்கை: இப்போட்டியில் பொது மக்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். வயது வரம்பில்லை. ஒரு நபர் நான்கு போட்டிகளில் மட்டும் பங்கேற்க அனுமதிப்படுவர். மாவட்ட அளவில் வெற்றி பெறும் வீரர்கள் மாநில விளையாட்டு போட்டிக்கு பரிந்துரைக்கப்படுவர். மேலும், விபரங்களுக்கு அண்ணா விளையாட்டு அரங்கில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலரை சந்திக்கலாம். விளையாட்டு போட்டியில் பங்கேற்க காலை 7 மணிக்கே விண்ணப்பப் படிவத்தை கொடுக்க வேண்டும். காலதாமதமாக வரும் வீரர்கள் போட்டியில் சேர்த்துக் கொள்ளபட மாட்டார்கள்.


