உள்ளாட்சித் தேர்தல் இடப் பங்கீட்டுக் குழு நியமனம்
உள்ளாட்சித் தேர்தல் இடப் பங்கீட்டுக் குழு நியமனம்
உள்ளாட்சித் தேர்தல் இடப் பங்கீட்டுக் குழு நியமனம்
ADDED : செப் 07, 2011 11:33 PM
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில், கூட்டணிக் கட்சிகளுடன் இடப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, அ.தி.மு.க., சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: நடைபெறவுள்ள தமிழக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, கூட்டணிக் கட்சிகளுடன் இடப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, கட்சியின் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வேளாண்மைத்துறை அமைச்சர் செங்கோட்டையன், மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


