/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/சிவசக்தி சித்தர் பீடமஹா கும்பாபிஷேகம்சிவசக்தி சித்தர் பீடமஹா கும்பாபிஷேகம்
சிவசக்தி சித்தர் பீடமஹா கும்பாபிஷேகம்
சிவசக்தி சித்தர் பீடமஹா கும்பாபிஷேகம்
சிவசக்தி சித்தர் பீடமஹா கும்பாபிஷேகம்
ADDED : செப் 08, 2011 01:25 AM
தர்மபுரி: தர்மபுரியை அடுத்த அ.கொல்லஅள்ளி மேல்மொடக்கோரி சிவசக்தி சித்தர்
பீடத்தில் மஹா கும்பாபிஷேகம் மற்றும் பால்குட விழா இன்று (செப்.,8)
நடக்கிறது.
இதையொட்டி கடந்த 28ம் தேதி காலை கங்கனம் கட்டுதல், கொடியேற்றம் நடந்தது.
நேற்று காலை 9 மணிக்கு கணபதி பூஜை, கணபதி அனுக்ஞை, கணபதி ஹோமம், தனபூஜை, கோ
பூஜை, திரவ்ய யாகம், பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது.மாலை வாஸ்து பூஜை,
ப்ரவேஷபலி, அங்குõ பூஜை, கங்கனம் கட்டுதல், கலசஸ்தாபிதம், கனகர்ஷனம்,
கலசங்கள் யாகசாலை, பிரவேஷம், முதல்கால யாக பூஜை, திரவ்யாகுதி, பூர்ணாகுதி,
தீபாராதனையம், சிவ சக்கதி ஆலத்தில் கோபுர கலசம் வைத்தல், அஷ்டபந்தனம்
சாற்றுதல் நடந்தது.தா.குளியனூர், சர்தனூர், அ.கொல்லஅள்ளி புதூர்,
மொரடக்கேரி வழியாக ஸ்வாமி விக்கிரகம் நந்தி, வான வேடிக்கை, தாரை, தப்பட்டை
முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்தடைந்தது.
இன்று காலை 7 மணிக்கு இரண்டாம்
கால யாக பூஜையும், நாடி சந்தானம், பர்ஷாகுதி, திவ்யாகுதி, பூர்ணாகுதி, மஹா
தீபாராதனையும், காலை 9 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானமும் நடக்கிறது.காலை 9
மணிக்கு மேல் சிவ சக்தி ஸ்வாமிக்கு கோபுரத்துக்கும், மூலவருக்கும் மஹா
கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை சிவசரவண சிவாச்சாரியர்
முன்னின்று நடத்தி வைக்கிறார். காலை 11 மணிக்கு பாலக்குட ஊர்வலமும், மதியம்
3 மணிக்கு பால் அபிஷேகமும், இரவு நடன நிகழ்ச்சியும் நடக்கிறது.நாளை முதல்
48 நாள் மண்டல பூஜை துவங்குகிறது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து
வருகின்றனர்.


