Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கான்கிரீட் கால்வாயாக மாற்ற கோரிக்கை

கான்கிரீட் கால்வாயாக மாற்ற கோரிக்கை

கான்கிரீட் கால்வாயாக மாற்ற கோரிக்கை

கான்கிரீட் கால்வாயாக மாற்ற கோரிக்கை

ADDED : அக் 05, 2011 10:27 PM


Google News
திருப்பூர் : 'அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன வாய்க்கால்களை கான்கிரீட் கால்வாய்களாக மாற்ற வேண்டும்,' என, அமராவதி நதி நீர் பாசன பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அமராவதி நதி நீர் பாசன பாதுகாப்பு இயக்கம்,

தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:

கரூர், திருப்பூர் மாவட்டங்கள் பயன் பெறும்,

அமராவதி அணை 1957ல் கட்டப்பட்டது; அப்போது முதல் தூர்வாரப்படாமல் உள்ளது. தூர்வாரினால், 15 அடி வரை கூடுதலாக தண்ணீரை தேக்கி, கோடை காலத்திலும் குடிநீர் பற்றாக்குறையை போக்க உதவும்.

அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன வாய்க்கால்களை கான்கிரீட் கால்வாய்களாக மாற்றி, கடை மடை வரை தண்ணீர் சேதாரமில்லாமல் விவசாய நிலங்

களுக்கு கிடைக்கவும், ஆண்டுதோறும் வாய்க்கால் பராமரிப்பு பணிக்கான செலவுகளை குறைக்கும் வகையில், 80 கோடி ரூபாய் செலவில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசு செயல்படுத்தும் என முந்தைய தி.மு.க., அரசால் அறிவிக்கப்பட்டது.

ஆனால், அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் அவசியம் கருதி, தமிழக அரசு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும், என்று தெரிவிக்கப்

பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us