Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/விஸ்வரூப மகா காளியம்மனுக்கு சம்ப்ரோஷண விழா: பக்தர்கள் பங்கேற்பு

விஸ்வரூப மகா காளியம்மனுக்கு சம்ப்ரோஷண விழா: பக்தர்கள் பங்கேற்பு

விஸ்வரூப மகா காளியம்மனுக்கு சம்ப்ரோஷண விழா: பக்தர்கள் பங்கேற்பு

விஸ்வரூப மகா காளியம்மனுக்கு சம்ப்ரோஷண விழா: பக்தர்கள் பங்கேற்பு

ADDED : ஜூலை 13, 2011 11:48 PM


Google News

சிதம்பரம்: சிதம்பரம் 53 அடி உயர விஸ்வரூப மகா காளியம்மனுக்கு சம்ப்ரோஷ்ண விழா நடந்தது.

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.சிதம்பரம் - கடலூர் மெயில் ரோட்டில் லால்புரத்தில் 53 அடி உயர விஸ்வரூப மகா காளியம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள காளியம்மன் வண்ணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு நேற்று காலை சம்ப்ரோஷணம் நடந்தது. அதையொட்டி நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு அனுக்ஞை, மகாசங்கல்பம் உள்ளிட்ட பூஜைகளும் முதல் கால யாகசாலை பூஜையும் நடந்தது.நேற்று காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, தொடர்ந்து கடம் புறப்பாடு முடிந்து 9.15 மணிக்கு விஸ்வரூப மகா காளியம்மனுக்கு சம்ப்ரோஷணம் நடந்தது. தங்க சபாபதி தீட்சிதர் பூஜை நடத்தினார்.விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us