/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/எய்ட்ஸ் விழிப்புணர்வு அதிகரிப்பு :ஆலோசகர் தகவல்எய்ட்ஸ் விழிப்புணர்வு அதிகரிப்பு :ஆலோசகர் தகவல்
எய்ட்ஸ் விழிப்புணர்வு அதிகரிப்பு :ஆலோசகர் தகவல்
எய்ட்ஸ் விழிப்புணர்வு அதிகரிப்பு :ஆலோசகர் தகவல்
எய்ட்ஸ் விழிப்புணர்வு அதிகரிப்பு :ஆலோசகர் தகவல்
ADDED : ஆக 03, 2011 10:55 PM
அன்னூர் : 'எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்துள் ளது,' என பிரசாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மூலம் பொதுமக்களிடம் எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. கோவை மாவட்டத்தில் விழிப்புணர்வு பிரசார கலை நிகழ்ச்சி கடந்த 28ம் தேதி துவங்கியது. காரமடை ஒன்றியத்தில் கலை நிகழ்ச்சியை முடித்த குழுவினர், அன்னூர் வந்தனர். பஸ் ஸ்டாண்டில் நடந்த துவக்க விழாவில் பேரூராட்சி துணை தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் கோவிந்தசாமி முன்னிலை வகித்தார். பிரசாரத்தில் ஒயிலாட்டம், கரகாட்டம் நடந்தது. பொகலூர் நம்பிக்கை மைய ஆலோசகர் சரவணன் பேசுகையில்,''கோவை மாவட்டத்தில் 12 ஒன்றியங்களிலும் 50 நாள் கலை நிகழ்ச்சியுடன் பிரசாரம் நடக்கிறது. ஒருவருக்கு ஒருத்தி என்கிற பண்பாட்டை பின்பற்ற வேண்டும். ரத்த தானம் பெறும்போது பரிசோதிக்கப்பட்ட ரத்தம் தானா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களை தொடுவதால் நோய் பரவாது. பொதுமக்களிடம் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. எய்ட்ஸ் பரவும் வேகமும் குறைந்துள்ளது,''என்றார்கரகாட்டத்துடன் பாடல்கள் மூலம் எய்ட்ஸ் நோய் உண்டாக காரணம், அதை தடுக்கும் விதம் விளக்கப்பட்டது.


