Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/பிக் பஜாரில் புதுமையான நிகழ்ச்சி

பிக் பஜாரில் புதுமையான நிகழ்ச்சி

பிக் பஜாரில் புதுமையான நிகழ்ச்சி

பிக் பஜாரில் புதுமையான நிகழ்ச்சி

ADDED : ஜூலை 14, 2011 11:04 PM


Google News

சென்னை : பியூச்சர் குழுமத்தின் ஒரு அங்கமான, 'பேஷன் அண்ட் பிக் பஜார்', சென்னை மக்களின் கனவை நனவாக்க, 'ஜஸ்ட் டிரை பண்ணுங்க' என்ற தலைப்பில் புதுமையான நிகழ்ச்சி ஒன்றை அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் அனைவருக்கும், 75 ரூபாய் மதிப்புள்ள கூப்பன் ஒன்றை, 'பேஷன் அண்ட் பிக் பஜார்' அளிக்கும். இந்த கூப்பனை பயன்படுத்தி, 600 ரூபாய்க்கு பொருட்களை வாங்கும்போது, 75 ரூபாய் தள்ளுபடி பெறலாம். இந்த கூப்பனைக்கொண்டு, புதிய பேஷன் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, போட்டி ஒன்றில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.



இதற்கான நுழைவு படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து, போட்டிக்கு தகுதி பெறலாம். முதலாவது நிகழ்ச்சி, வரும் 18ம்தேதி, பிக் பஜாரில் நடைபெறும். இதில் பங்கேற்பவர்களின் பொழுதுபோக்கு திறன், குரல் மற்றும் நம்பிக்கை அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும். தேர்ச்சி பெறும் நபர்கள், 24ம்தேதி நடைபெறும் இறுதி நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு, பிரபலங்கள் அடங்கிய நடுவர்களால் தேர்வு செய்யப்படுவர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us