Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/தீ விபத்தில் 4 குடிசைகள் சாம்பல்:தீயில் சிக்கி போதை வாலிபர் பலி

தீ விபத்தில் 4 குடிசைகள் சாம்பல்:தீயில் சிக்கி போதை வாலிபர் பலி

தீ விபத்தில் 4 குடிசைகள் சாம்பல்:தீயில் சிக்கி போதை வாலிபர் பலி

தீ விபத்தில் 4 குடிசைகள் சாம்பல்:தீயில் சிக்கி போதை வாலிபர் பலி

ADDED : ஜூலை 13, 2011 05:19 AM


Google News
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த, புட்லூர் ராமாபுரம் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், நான்கு குடிசைகள் எரிந்து சாம்பலானது.

குடிபோதையில் இருந்த வாலிபர் தீயில் சிக்கி இறந்தார்.புட்லூர் ராமாபுரம் பகுதியில் உள்ளது, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில். இக்கோவில் அருகே குடிசையில் தங்கி தனியார் தொழிற்சாலையில் செக்யூரிட்டியாக பணிபுரிபவர் பாபு மகன் கமலக்கண்ணன், 37. இவரது மனைவி கோவில் அருகே, புட்டரிசி வியாபாரம் செய்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, குடிபோதையில் குடிசைக்கு வந்த கமலக்கண்ணன் அங்கிருந்த மண்ணெண்ணெய் சிம்னி விளக்கை எட்டி உதைத்தார். இதில் குடிசை முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. மேலும், காற்றில் தீ பரவி, அருகில் இருந்த நான்கு குடிசைகளும் எரிந்தது. தகவலறிந்து திருவள்ளூர் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் வந்து தீயை அணைத்தனர்.தீ விபத்தில் பலத்த காயமடைந்த கமலக்கண்ணன் சென்னை கே.எம். சி., அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us