Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/கன்டோன்மென்ட் பிரச்னைகளை தீர்க்க உறுதி

கன்டோன்மென்ட் பிரச்னைகளை தீர்க்க உறுதி

கன்டோன்மென்ட் பிரச்னைகளை தீர்க்க உறுதி

கன்டோன்மென்ட் பிரச்னைகளை தீர்க்க உறுதி

ADDED : செப் 03, 2011 11:26 PM


Google News

குன்னூர் : வெலிங்டன் கன்டோன்மென்ட் மக்களின் கோரிக்கை, நிபந்தனைக்குட்பட்டு நிர்வாகம் 'பச்சைக் கொடி' காட்டியுள்ளது.

குன்னூர் வெலிங்டன் கன்டோன்மென்ட் ஏழு வார்டுகளில் வசிக்கும் சிவில் மக்களுக்கும், நிர்வாக அதிகாரிகள், வார்டு உறுப்பினர்களுக்கு இடையே சுமூக உறவை ஏற்படுத்தும் நோக்கில், முதன் முறையாக நிர்வாக அதிகாரிகள், போர்டு துணை தலைவர், உறுப்பினர்கள், வார்டு மக்கள், கிராம தலைவர்கள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் வெலிங்டனில் நடந்தது.



திரளாக பங்கேற்ற மக்கள், கிராம தலைவர்கள் பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். 'சில வார்டு உறுப்பினர்கள் வார்டு பக்கம் தலை காட்டுவதே இல்லை' என குற்றம் சாடினர். பட்டா வீட்டை விற்க கன்டோன்மென்ட் நிர்வாகம் தடையில்லா சான்று வழங்க நிர்வாகத்தினர் காலம் தாழ்த்த கூடாது; பல மடங்கு அதிகமாக விதிக்கப்பட்டுள்ள வீட்டு வரியை குறைக்க வேண்டும்; கட்டட வரைமுறை விதியை தளர்த்த வேண்டும்; வீடுகளையொட்டி சொந்த நிலத்தில் கழிவறை, மாட்டுக் கொட்டகை கட்ட அனுமதிக்க வேண்டும்; வாரம் ஒரு முறை மக்கள் குறை கேட்பு கூட்டம் நடத்த வேண்டும்,' என தெரிவித்தனர். இரு நாளுக்கு முன் நடந்த கன்டோன்மென்ட் போர்டு கூட்டத்தில், போர்டு தலைவர். பிரிகேடியர் ஜாதவ் கவனத்துக்கு மக்களின் கோரிக்கைகள் கொண்டு செல்லப்பட்டன.



இது குறித்து துணை தலைவர் பாரதியார் கூறுகையில், ''வீட்டு பட்டாவுக்கு தடையில்லா சான்று பெற வேண்டியதில்லை; மாவட்ட கலெக்டருக்கு தகவல் கொடுத்து, குன்னூர் சார் பதிவாளர் மூலம் பெயர் மாற்றிக் கொள்ளலாம். தங்களுக்கு சொந்தமான நிலத்தில் அதிகபட்சம் 25 சதுர அடி பரப்பளவுக்கு கழிவறை, 100 சதுர அடிக்கு மிகாமல் மாட்டு கொட்டகைகளை அமைத்து பயன்படுத்தி மேம்பாடு அடையலாம் என போர்டு தலைவர் தன்னிடம் உறுதியளித்துள்ளார். ,'' என்றார்.



செலவு ரூ.42 கோடி: வரவு ரூ.4 கோடி..!

கன்டோன்மென்ட் நிர்வாகத்தின் 2011-12ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், 42 கோடியே 48 லட்சத்து 20 ஆயிரத்து 690 ரூபாய் செலவாகும்; வரியினங்கள் மூலம் 4 கோடியே 62 லட்சத்து 65 ஆயிரத்து 363 ரூபாய் வருமானம் கிடைக்கும்; அதன்படி, 37 கோடியே 85 லட்சத்து 75 ஆயிரத்து 327 ரூபாய் துண்டு விழும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஊழியர் சம்பளம், சம்பளம், நிர்வாக செலவு, சாதாரண செலவு உட்பட இனங்களுக்கு மட்டும் 34 கோடியே 66 லட்சத்து 68 ஆயிரத்து 617 ரூபாய் செலவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. போர்டு உறுப்பினர்களின் கோரிக்கைப்படி சின்ன வண்டிச்சோலையில் பள்ளி கட்டடம், வார்டு தோறும் சமுதாய கூடம், நீர் மேம்பாடு திட்டம், பாதாள சாக்காடை திட்டம் உட்பட புதிய திட்டங்களுக்கு 3 கோடியே 19 லட்சத்து 6 ஆயிரத்து 710 ரூபாய் கேட்கப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us