விவசாயிகள் பாதுகாப்பு சட்ட நீக்க மசோதா தாக்கல்
விவசாயிகள் பாதுகாப்பு சட்ட நீக்க மசோதா தாக்கல்
விவசாயிகள் பாதுகாப்பு சட்ட நீக்க மசோதா தாக்கல்

சென்னை : தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட, விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள் சமூகப் பாதுகாப்பு நலச்சட்டத்தை நீக்கும் மசோதா, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறியிருப்பதாவது: விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள் நல செயல் திட்டங்கள், வருவாய்த் துறை அலுவலர்களால் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், 2006ம் ஆண்டு, விவசாயிகள் சமூகப் பாதுகாப்பு நலச் சட்டப்படி, விவசாயிகளுக்கான வாரியம் தான், நலத் திட்டத்தைச் செயல்படுத்த பொறுப்பானது. இதில், நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. வாரியம் அமைப்பதும், அதற்கு, அலுவல் சாரா உறுப்பினர்களை நியமிப்பதும், அரசுக்கு கூடுதல் செலவினம்.
ஆனால், 2005ம் ஆண்டு முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டமானது, நல வாரியம் அமைக்காமலேயே செயல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, உழவர் பாதுகாப்புத் திட்டத்தை, தற்காலிகச் சூழலுக்கேற்ப சீரமைத்து, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் குடும்பத்திற்கு, நிதி உதவி வழங்கும் வகையில், நடைமுறைப்படுத்தப்படும். எனவே, 2006ம் ஆண்டு விவசாயிகள் சமூகப் பாதுகாப்பு நலச் சட்டத்தை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இம்மசோதாவிற்கு, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் மற்றும் புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ.,க்கள், துவக்க நிலையிலேயே எதிர்ப்புத் தெரிவித்தனர்.


